மணிமேகலை முதல் ஆல்யா மானசா வரை.. டிவி பிரபலங்களின் விலையுயர்ந்த ஆடம்பர கார்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,March 08 2023]

சினிமா நட்சத்திரங்களுக்கு இணையாக தற்போது டிவி சீரியல்களில் மற்றும் தொகுப்பாளினியாக பணி புரியும் நட்சத்திரங்களும் சம்பாதித்து வருகின்றனர் என்றும் குறிப்பாக தொலைக்காட்சி பிரபலங்கள் அனைவரும் கிட்டத்தட்ட யூடியூப் சேனல் ஆரம்பித்து லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தொலைக்காட்சி பிரபலங்களின்ஆடம்பர கார்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

சின்னத்திரை உலகின் மூலம் பிரபலமடைந்தவர்களில் ஒருவர் மணிமேகலை என்பதும் குறிப்பாக ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி இவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது என்பது தெரிந்ததே. இவரிடம் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 என்ற சொகுசு கார் இருப்பதாகவும் இந்த காரின் விலை 55 லட்சத்திற்கும் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

சின்னத்திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சரண்யா, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ உள்பட பல சீரியல்கள் நடித்துள்ளார். இவர் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 என்ற கார் வைத்திருக்கிறார் என்பதும் இந்த காரின் விலை சுமார் 78 லட்சத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி பிஎம்டபிள்யூ பைக்கும் இவரிடம் உள்ளது என்றும் இந்த பைக்கின் விலை மூன்று லட்சத்திற்கும் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிவி சீரியல் நடிகை மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானி நாராயணன் பல ஆடம்பர கார்கள் இருப்பதாகவும் அவற்றில் மிக உயர்ந்த காராக பிஎம்டபிள்யு 7 சிரிஸ் கார் உள்ளது. சமீபத்தில் வாங்கப்பட்ட இந்த கார் 1.2 கோடிக்கும் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் ஒரு சில சொகுசு கார்களை வைத்துள்ளார். மேலும் இவரிடம் சில விலையுயர்ந்த பைக்குகள் உள்ளன.

ராஜா ராணி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் சஞ்சீவ் - ஆல்யா மானாசாஆகிய இருவருமே பிரபலமானார்கள் என்பதும், காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியிடம் மெர்சிடஸ் பென்ஸ் சி கிளாஸ் சொகுசு கார் இருப்பதாகவும் இந்த காரின் விலை 57 லட்சத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஒரே படத்தில் மட்டுமே நடித்த 'காதல் மன்னன்' மானு.. இப்ப எப்படி இருக்கிறார் தெரியுமா?

அஜித் நடிப்பில் சரண் இயக்கத்தில் உருவான 'காதல் மன்னன்' என்ற திரைப்படத்தில் நாயகி ஆக நடித்த நடிகை மானுவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

'புதிய பாதை' இரண்டாம் பாகம்.. டைட்டிலை அறிவித்த பார்த்திபன்..!

 பார்த்திபன் நடிகராக மற்றும் இயக்குனராக அறிமுகமான 'புதிய பாதை' என்ற திரைப்படம் கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.

குடும்பத்துடன் ஹோலி கொண்டாடும் ஸ்ரேயா கோஷல்.. செம டான்ஸ் ஆடும் வீடியோ..!

பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. 

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்ப குத்துவிளக்கு முல்லையா இவர்? செம கிளாமர் புகைப்படங்கள்..!

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' என்ற தொலைக்காட்சி தொடரில் குடும்பப் பாங்கான முல்லை கேரக்டரில் நடித்த காவ்யா அறிவுமணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தூக்கலான கிளாமர் புகைப்படங்களை பதிவு

சூர்யா-ஜோதிகா பாடலுக்கு செம நடனம் ஆடிய அமலாபால்.. கலக்கும் கிளாமர் உடை..!

சூர்யா மற்றும் ஜோதிகாவின் பாடலுக்கு நடிகை அமலா பால் செம நடனமாடிய வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.