ஹனிமூனில் பிறந்த நாள் கொண்டாட்டம்: மனைவிக்கு முத்தத்தில் நன்றி சொன்ன நடிகர்!

  • IndiaGlitz, [Wednesday,July 13 2022]

தற்போது பெரிய திரை பிரபலங்களுக்கு இணையாக சின்ன திரையுலகினர்களும் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆகி வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சின்னத்திரை நடிகர் நவீன் மற்றும் சின்னத்திரை செய்தி வாசிப்பாளர் கண்மணி ஆகிய இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் கண்மணி சேகர். இவர் ஏற்கனவே பல தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கண்மணி சேகர் மற்றும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ’இதயத்தை திருடாதே’ என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் நவீனும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி நிலையில் தற்போது இருவரும் தேனிலவு கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் தேனிலவு கொண்டாடிக் கொண்டிருக்கும் போது நவீனின் பிறந்த நாள் வந்ததை அடுத்து நவீனுக்கு சர்ப்ரைசாக கேக் வெட்டி கேண்டில் லைட் கொண்டாட்டத்தை கண்மணி ஏற்பாடு செய்திருக்கிறார். தனது பிறந்தநாளில் சர்ப்ரைஸ் செய்த கண்மணிக்கு நவீன் முத்தம் கொடுத்து நன்றி தெரிவித்த வீடியோவை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.