close
Choose your channels

நீச்சல் குளத்தில் தொலைக்காட்சி பிரபலம்: கணவரே எடுத்த புகைப்படம்!

Tuesday, February 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் மற்றும் மலையாள தொலைக்காட்சிகளில் புகழ்பெற்ற தொகுப்பாளினி ஒருவர் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் அந்த புகைப்படத்தை தனது கணவரே எடுத்துள்ளதாக கூறியுள்ளார்

சன் டிவியில் ஒளிபரப்பான ’சூப்பர் சேலஞ்ச்’ ’சவாலே சமாளி’ உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தியா மேனன். இவர் விஷால் நடித்த ’தீராத விளையாட்டு பிள்ளை’ விஜய் நடித்த ’வில்லு’ உள்பட ஒருசில படங்களில் பாடலும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாடகி, தொகுப்பாளினி, நடன கலைஞர் என பன்முக திறமை உள்ள இவர் சிங்கப்பூரை சேர்ந்த கார்த்திக் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் அவர் கணவருடன் சிங்கப்பூரிலேயே செட்டில் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அவ்வப்போது தியாமேனன் தொகுப்பாளினி பணியை செய்து வருகிறார் என்பதும் சமூகவலைதளத்தில் குறிப்பாக யூடியூபில் ஆக்டிவாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காதலர் தினத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொட்டைமாடி நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்களை கூறிய அவர் இந்த புகைப்படத்தை எடுத்தது தனது கணவர் கார்த்திக் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பதும் வாழ்த்துக்கள் கூறி கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment