சின்னத்திரை நடிகை நிலானி திடீர் கைது! 

  • IndiaGlitz, [Wednesday,June 20 2018]

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தூத்துகுடி மக்கள் பல நாட்களாக போராடி வந்தனர். இந்த போராட்டத்தின் 100வது நாளில் திடீரென வன்முறை வெடித்ததால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு அதில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இந்த நிலையில் போலீசாரின் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அரசியல்வாதிகள், திரையுலகினர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில் சின்னத்திரை நடிகை நிலானி என்பவர் போலீஸ் உடையில் சமூக இணையதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர் தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார். இதனையடுத்து நிலானி மீது கடந்த 24ஆம் தேதி வடபழனி போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்தனர்

இந்த நிலையில் தூத்துக்குடி சம்பவம் குறித்து போலீஸ் உடையில் அவதூறு கருத்து கூறியதாக சின்னத்திரை நடிகை நிலானியை குன்னூரில் வடபழனி போலீசார் சற்றுமுன் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையால் சின்னத்திரையுலகினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.