அடுத்தடுத்த நாட்களில் சின்னத்திரை சகோதரிகள் நடிகைகள் மரணம்.. அதிர்ச்சி தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,March 09 2024]

சின்னத்திரையில் நடிக்கும் சகோதரிகள் இருவர் அடுத்தடுத்த நாட்களில் நோய் காரணமாக மரணம் அடைந்த சம்பவம் சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியில் கலாஷ், மேரி துர்கா, கும்கும் பாக்யா, ஜனக், பரினீதி உட்பட பல சின்னத்திரை சீரியல்களில் நடித்தவர் நடிகை டோலி சோஹி. இவர் கடந்த சில மாதங்களாக கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்காகச் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 47.

டோலியின் சகோதரியும் சின்னத்திரை நடிகையுமான அமன்தீப் சோஹி என்பவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன் தினம் மரணமடைந்தார். அமன்தீப் சோஹி காலமான மறுநாள் அவரது சகோதரி டோலி சோஹியும் மரணம் அடைந்திருப்பது அவர்கள் குடும்பத்திலும் சின்னத்திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு சின்னத்திரை நடிகைகள் அடுத்தடுத்த நாட்களில் காலமானதையடுத்து ரசிகர்கள், திரையுலகினர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.