பிரபல சின்னத்திரை நடிகை சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல சின்னத்திரை நடிகை ஒருவர் சென்னை காவல்துறை ஆணையரை சந்தித்து புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாணவர்கள் கடந்த சில நாட்களாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை அடுத்து கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சட்டம் குறித்து ஒருசில அரசியல்வாதிகள் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் அவ்வாறு தவறான தகவல்களை பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்த சின்னத்திரை நடிகை ஜெயலஷ்மி இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து சமூக வலைத்தளங்கள் மூலமாக மக்கள் மத்தியில் பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இவ்வாறு தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் வகையில் போராட்டங்கள் நடைபெறுகிறது’ என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments