என்னால் தாங்க முடியல, தயவுசெய்து பிரார்த்தனை செய்யுங்கள்: சின்னத்திரை நடிகை கண்ணீர் வேண்டுகோள்

  • IndiaGlitz, [Wednesday,April 20 2022]

தனது தாயார் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் விரைவில் குணமாக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் சின்னத்திரை நடிகை ஒருவர் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

சின்னத்திரையில் பல தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் நடிகை ப்ரீத்தா. இவரது கணவர் ராகவ் தொலைக்காட்சி சீரியல்களிலும், சினிமாவிலும் நடித்தவர் என்பதும் அது மட்டுமின்றி இசையமைப்பாளர், தொகுப்பாளர், இயக்குனர் என பல்வேறு திறமைகளை கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ப்ரீத்தா சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது தாயார் தவறிக் கீழே விழுந்து விட்டதாகவும், அதனால் அவரால் பேசக்கூட முடியவில்லை என்றும் தற்போது அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாகவும், அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் கண்ணீருடன் கேட்டுக்கொண்டுள்ளார்

ஏற்கனவே தனது அம்மாவுக்கு இரண்டு முறை மேஜர் சர்ஜரி செய்து உள்ளதாகவும் அதற்கான சிகிச்சையை சென்று கொண்டிருக்கும் போதே திடீரென மீண்டும் இப்படி நடந்தது மிகவும் மன வேதனையாக உள்ளது என்றும், தயவு செய்து எனது அம்மாவுக்காக எல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் அவருடன் கண்ணீருடன் கேட்டுக் கொண்டுள்ளார்.