அப்பாவான விஜய் டிவி பிரபலம்.....! கவிதையுடன் நெகிழ்ச்சி பதிவு....!
Send us your feedback to audioarticles@vaarta.com
சன் தொலைக்காட்சியில் வெளியான வம்சம் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகர் சசிந்தர் புஷ்பலிங்கம். இதன்பின்பு பிரியங்கா ராவ், சந்தியா, ஜெய லட்சுமி, ஷாமிலி சுகுமார் உள்ளிட்ட பிரபல சீரியல் நடிகைகளுடன், பல சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார். விஜய் டிவியில் வெளியான ஒளிபரப்பான "தமிழ் கடவுள் முருகன்" தொடரில், சிவன் மற்றும் வீரபத்திரன் கேரக்டர்களில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இதையடுத்து சன் டிவியில் வெளியான "சந்திரகுமாரி, ரோஜா " சீரியல்களில் நடித்ததன் மூலம், ரசிகர்களை மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இதேபோல் விஜய் டிவியில் "நாம் இருவர் நமக்கு இருவர்-1 " தொடரில் நடித்தவர், தற்போது இரண்டாம் பாகத்திலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சென்ற வருடம் கொரோனா ஊரடங்கின் போது திருமணம் செய்த நட்சத்திர தம்பதிகளில், இவரும் ஒருவர். சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சசிந்தர், அவ்வப்போது தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அண்மையில் தன் கர்ப்பிணி மனைவியுடன், எடுத்த புகைப்படங்களை "சேயையும் தாயையும் சேர்த்து தாங்கும் கரம், வரம்" என்று கவிதையுடன் வெளியிட்டு இருந்தார்.
இந்தநிலையில் இத்தம்பதிக்கு பெண் குழந்தை நேற்று பிறந்துள்ளது. இதை "ஆழியிலே அவதரித்த அழகே
அகத்தை ஆட்கொண்ட அன்பே
தாயினுள் தோன்றிய தவமே
தந்தையின் தோளில் சுகமே
பெற்றோரின் பொக்கிஷம் நீ!
வாழ்வின் அர்த்தம் நீ!
காதலின் "சகா"ப்தம் நீ!
யாவும் நீ!யாதும் நீ! SA❤️GA நீ!"
என்ற அழகான கவிதையுடன் இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments