அப்பாவான விஜய் டிவி பிரபலம்.....! கவிதையுடன் நெகிழ்ச்சி பதிவு....!

  • IndiaGlitz, [Wednesday,September 01 2021]

சன் தொலைக்காட்சியில் வெளியான வம்சம் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகர் சசிந்தர் புஷ்பலிங்கம். இதன்பின்பு பிரியங்கா ராவ், சந்தியா, ஜெய லட்சுமி, ஷாமிலி சுகுமார் உள்ளிட்ட பிரபல சீரியல் நடிகைகளுடன், பல சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார். விஜய் டிவியில் வெளியான ஒளிபரப்பான தமிழ் கடவுள் முருகன் தொடரில், சிவன் மற்றும் வீரபத்திரன் கேரக்டர்களில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இதையடுத்து சன் டிவியில் வெளியான சந்திரகுமாரி, ரோஜா சீரியல்களில் நடித்ததன் மூலம், ரசிகர்களை மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இதேபோல் விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர்-1 தொடரில் நடித்தவர், தற்போது இரண்டாம் பாகத்திலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சென்ற வருடம் கொரோனா ஊரடங்கின் போது திருமணம் செய்த நட்சத்திர தம்பதிகளில், இவரும் ஒருவர். சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சசிந்தர், அவ்வப்போது தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அண்மையில் தன் கர்ப்பிணி மனைவியுடன், எடுத்த புகைப்படங்களை சேயையும் தாயையும் சேர்த்து தாங்கும் கரம், வரம் என்று கவிதையுடன் வெளியிட்டு இருந்தார்.
இந்தநிலையில் இத்தம்பதிக்கு பெண் குழந்தை நேற்று பிறந்துள்ளது. இதை ஆழியிலே அவதரித்த அழகே

அகத்தை ஆட்கொண்ட அன்பே
தாயினுள் தோன்றிய தவமே
தந்தையின் தோளில் சுகமே
பெற்றோரின் பொக்கிஷம் நீ!
வாழ்வின் அர்த்தம் நீ!
காதலின் சகாப்தம் நீ!
யாவும் நீ!யாதும் நீ! SA❤️GA நீ!

என்ற அழகான கவிதையுடன் இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார்.

More News

3 ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி அவசியமா? நிபுணர்களின் விளக்கம் என்ன?

2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னர் உடலில் உருவாகும் நோய்எதிர்ப்பு திறன் நாட்கள் செல்ல செல்ல

தினமும் தொழுகை செய்கிறீர்களா என கேள்வி கேட்ட நெட்டிசன்.....?சீரியல் நடிகை நச் பதில்...!

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை பரீனா.

'டிக்கிலோனா' படத்தில் ஹர்பஜன்சிங் கேரக்டர்: தமிழில் டுவிட் செய்து அசத்தல்!

சந்தானம் நடித்துள்ள 'டிக்கிலோனா' படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் அவர் நடித்துள்ள கேரக்டர் குறித்த தகவலை அவர் தனது டுவிட்டரில்

மாஸ்கோ டூ சென்னை: நேரடி விமானத்தில் கிளம்பிய தல அஜித்!

தல அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருவதாகவும் அங்கு ஒரு சில அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சேசிங் காட்சிகள் படமாக்கப்பட்டு

சன்னிலியோனின் தமிழ் திரைப்படத்தின் டைட்டில்லுக் போஸ்டர் ரிலீஸ்!

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் ஏற்கனவே 'வடகறி' என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி 'வீரமாதேவி' என்ற தமிழ் திரைப்படத்தில்