என் மனைவி கொலை செய்யப்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல: போலீஸில் புகார் அளித்த பிரபல நடிகர்!

  • IndiaGlitz, [Saturday,October 30 2021]

என் மனைவி கொலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவ்வாறு கொலை செய்யப்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்றும் தொலைக்காட்சி நடிகர் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல தொலைக்காட்சி நடிகர் ஈஸ்வர் என்பவருக்கும் சின்னத்திரை பிரபல நடிகையான ஜெயஸ்ரீ என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக ஜெயஸ்ரீ காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து இருவரும் தற்போது பிரிந்து வாழ்கின்றனர் என்பதும் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் ஈஸ்வர் இன்று சென்னை காவல்துறை ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் தன்னுடைய மனைவி ஜெயஸ்ரீ மருத்துவர் ராகவேஷ் என்பவருடன் ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும், ராகவேஷ் தந்தை சண்முகத்திற்கு இது பிடிக்கவில்லை என்றும் இதனால் ஜெயஸ்ரீயை அவர் கொலை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அவ்வாறு சண்முகம் கொலை செய்தால் அந்த பலி என் மீது வந்து விட வாய்ப்பு இருப்பதாகவும், அதனால் ஒருவேளை ஜெயஸ்ரீக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்பதற்காகவே நான் காவல்துறை ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஜெயஸ்ரீ இதே போன்று பல ஆண்களுடன் பழகி உள்ளார் என்றும் தன்னுடைய விவாகரத்து வழக்கில் ஆஜராகாமல் காலத்தை கடத்தி வருகிறார் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். நடிகர் ஈஸ்வர் கொடுத்த இந்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.