தொடர்ந்து 45 நாட்கள் பப்ஜி விளையாடிய மாணவர் பரிதாப பலி!
- IndiaGlitz, [Friday,March 22 2019]
பப்ஜி என்ற ஆன்லைன் கம்ப்யூட்டர் விளையாட்டு, மாணவர்கள் மற்றும் இளைஞர்களை அடிமைப்படுத்துவதால் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்துள்ளது. குஜராத் உள்ளிட்ட ஒருசில மாநிலங்கள் இந்த விளையாட்டை தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சாகர் என்ற இஞ்சினியரிங் கல்லூரி மாணவர், பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகி தொடர்ந்து 45 நாட்கள் இந்த விளையாட்டை விளையாடியுள்ளார். இதனால் கழுத்து நரம்பு பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து அவருடைய நண்பர்கள் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது சாகர் மரணம் அடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், 'தங்கள் நண்பர் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையானதால் உயிருக்கு போராடி வருவதாகவும், இளைஞர்கள் யாரும் இந்த விளையாட்டிற்கு அடிமையாக வேண்டாம் என்றும் அந்த வீடியோவில் நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.