மது பிரியர்களுக்கு இலவச மது வழங்கிய தெலுங்கானா இளைஞர் கைது

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த அதில் தற்போது 20 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில் இந்த இருபது நாட்களும் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்ததால் மதுவுக்கு அடிமையானவர்கள் மது கிடைக்காமல் திண்டாடினர்

ஒரு சில நாட்களில் மட்டுமே கள்ள மார்க்கெட்டில் மது கிடைத்த நிலையில் தற்போது அதுவும் கிடைக்கவில்லை என்பதால் மதுவுக்கு அடிமையான சிலர் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த குமார் என்பவர் ஊரடங்கிற்கு முன்னதாகவே மொத்தமாக மது வாங்கி வைத்து இருந்ததாகவும், மது பிரியர்கள் பலர் தற்கொலை செய்து கொள்வதை காண சகிக்காமல் அவர் மதுவுக்கு அடிமையானவர்களை தேடி கண்டுபிடித்து இலவசமாக மது கொடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானதை அடுத்து தெலுங்கானா போலீசார் அவரை கைது செய்தனர்.

மதுவுக்கு அடிமையானவர்களை காப்பாற்ற வேண்டும் என்பது நல்ல நோக்கம் தான் என்றாலும், அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் அவர் பதிவு செய்யாமல் இருந்திருக்கலாம்

More News

குழந்தை பெற்ற ஒரே மாதத்தில் பணிக்கு திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அனைத்து நாட்டு அரசாங்கங்களும், காவல்துறையினரும்

கொரோனா எதிரொலி; எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபேக் நாடுகள் முடிவு!!!

கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முறைப்படுத்தும் நோக்கில் 1960 களில் உருவாக்கப்பட்ட ஒபேக் கூட்டமைப்பில் இதுவரை 14 நாடுகள் உறுப்பு நாடுகளாக இருக்கின்றன.

கொரோனா நிலைமை மோசமாவதற்கு அரசியல் அமைப்புகளின் துரோகம்தான் காரணம்!!! நோம் சாம்ஸ்கி குற்றச்சாட்டு!!!

அமெரிக்காவின் தத்துவவியல் நிபுணரும், மொழியியல் அறிஞருமான நோம் சாம்ஸ்கி இந்த உலகம் கொரோனாவை கையாண்ட விதம் தனக்கு அதிர்ச்சி அளிக்கிறது

கொரோனாவுக்கு பிறகு வெளியாகும் முதல் இந்திய திரைப்படம்!

சீனாவிலுள்ள வூகான் என்ற மாகாணத்தில் கொரோனா வைரஸ் தோன்றி, அந்நாட்டில் மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்திலும் தற்போது பரவியுள்ளது.

எனக்கே சாராயம் இல்லைன்னா எவனும் குடிக்க கூடாது: பிரபல விஜேவின் வீடியோ

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் கடந்த மூன்று வாரங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் எந்தவித திரைப்பட படப்பிடிப்பும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின்