குடிகாரர் செய்த அலப்பறை, பொக்லைன் இயந்திரத்தால் தள்ளிய டிரைவர்: வைரலாகும் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலங்கானா மாநிலத்தில் மது அருந்தி அலப்பறை செய்த ஒருவரை பொக்லைன் வாகன டிரைவர் பொக்லைன் இயந்திரத்தால் அந்த குடிகாரர்களை தள்ளி விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் முலுகு பகுதியில் பொக்லைன் டிரைவர் ஒருவர் தனது பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குடிகாரர் ஒருவர் பொக்லைன் டிரைவருடன் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. மேலும் அவரது வேலையை கெடுக்கும் வகையிலும் குடித்து விட்டு அவர் சலம்பல் செய்து கொண்டிருந்தார்.
இதனால் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பொக்லைன் டிரைவர், பொக்லைன் இயந்திரத்தால் அந்த குடிகாரரை தள்ளிவிட்டார். இதனால் அந்த குடிகாரர் கீழே விழுந்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை செய்து பொக்லைன் டிரைவர் மீது பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் அந்த குடிகாரரையும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH A proclainer's driver hits a man with its front bucket in Telangana's Mulugu. FIR has been registered against the driver. Sub-Inspector, Mangapeta Police Station says, "The man was drunk and started arguing with the driver, following which the driver hit him." (07.07.20) pic.twitter.com/EjTDW6q3rD
— ANI (@ANI) July 8, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout