ஜெயலலிதா சொத்து குறித்து வழக்கு போட்டவருக்கு ரூ.1 லட்சம் அபராதம். நீதிமன்றம் அதிரடி
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளரகவும் பதவி வகித்து வந்த ஜெயலலிதா கடந்த 5-ந் தேதி காலமானார். இந்நிலையில் அவருக்கு வாரிசு யாரும் இல்லாததால் அவருக்கு சொந்தமாக ஐதராபாத்தில் இருக்கும் சொத்துக்களை தெலுங்கானா அரசே ஏற்க உத்தரவிட வேண்டும் என்று கைரிப் கைடு என்ற அமைப்பின் சார்பில் வழக்க்கு தொடரப்பட்டது
இந்த வழக்கு விசாரணை இன்று நடந்த நிலையில் வழக்கு தொடர்ந்த அமைப்புக்கு கடும் கண்டனத்தை நீதிமன்றம் தெரிவித்தது. ஜெயலலிதாவுக்கு அண்ணன் மகள், மகன் இருக்கும்போது அவருக்கு வாரிசு இல்லை என்று எப்படி வழக்கு தொடரலாம் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்..
மேலும் இந்த வழக்கு விளம்பரத்திற்காக போடப்பட்டு நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கியதால் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout