திருமணமான சில நிமிடங்களில் உயிரிழந்த மணப்பெண்: அதிர்ச்சியில் மணமகன்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆயிரம் காலத்து பயிர் என்று கூறப்படும் திருமணம் ஒருசில நிமிடங்களில் முடிவுக்கு வந்த சோக நிகழ்ச்சி ஒன்று தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மெகபூப் நகர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி என்ற மணமகளுக்கும், ரங்காரெட்டி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்ற மணமகனுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட இந்த திருமணம் முடிந்த பின்னர் அனைவரும் புகைபடங்கள் எடுத்து மகிழ்ச்சியாக இருந்தனர்.
இந்த நிலையில் மணமகள் அருந்ததி நட்சத்திரம் பார்க்கும் சடங்குக்காக அழைத்து செல்லப்பட்டார். வானத்தை நோக்கி மணப்பெண் லட்சுமி அருந்ததி நட்சத்திரத்தை பார்த்து கொண்டிருந்தபோது, திடீரென்று அவர், மணமகன் காலில் சுருண்டு விழுந்தார். இதனால் மணமகன் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து உடனடியாக மணமகள் லட்சுமி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு லட்சுமி ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை கேட்டு திருமண வீட்டார் துயரத்தில் மூழ்கினர். திருமணமான ஒருசில நிமிடங்களில் மணமகளின் வாழ்க்கை முடிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout