'தேஜாவு' இயக்குனரின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்..!

  • IndiaGlitz, [Thursday,June 22 2023]

’தேஜாவு’ இயக்குனரின் அடுத்த படமான ’தருணம் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸென் ஸ்டுயோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் தருணம் திரைப்படத்தின் பூஜை மிகச் சமீபத்தில் நடைபெற்றது, இந்நிலையில் இன்று சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. முதல் படமான தேஜாவு படத்தில் திரில்லர் கதையில் கலக்கிய இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இப்படத்தில் மனம் வருடும், மிக மென்மையான காதல் கதை மூலம் ரசிகர்களை மயக்க வருகிறார். முதல் நீ முடிவும் நீ படம் மூலம் இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த கிஷன் தாஸ் இப்படத்தில் நாயகனாக நடிக்க, தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும், பிரபல இளம் நடிகை ஸ்மிருதி வெங்கட் நாயகியாக நடிக்கிறார்.

பெரும் பொருட்செலவில் ஸென் ஸ்டுயோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் இப்படத்தைத் தயாரிக்க, ஆர்கா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் இணை தயாரிப்பு செய்கிறது. இன்று சென்னையில் இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு இனிதே துவங்கியுள்ளது.

கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட், ராஜ் ஐயப்பன், பால சரவணன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவும், அருள் இ சித்தார்த் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்து வருகிறார்.