close
Choose your channels

'தேஜாவு' இயக்குனரின் அடுத்த படம்.. ஹீரோ, இசையமைப்பாளர் அறிவிப்பு..!

Sunday, February 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அருள்நிதி நடித்த ’தேஜாவு’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியானது.

அரவிந்த் ஸ்ரீனிவாசனின் அடுத்த திரைப்படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வின் ஹீரோவாக நடிக்க உள்ளார். இவர் சமீபத்தில் நடித்த ’செம்பி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளரும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சசிகுமார் நடித்த ‘கிடாரி’, உதயநிதி ஸ்டாலின் நடித்த ’நிமிர்’ உள்பட ஒரு சில படங்களில் இசையமைத்த தர்புகா சிவா தான் இந்த படத்தின் இசையமைப்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ராஜா பட்டாச்சார்யா, படத்தொகுப்பாளராக அருள் சித்தாத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஆர்கா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்த தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment