இவரா பிக்பாஸ் வின்னர்? விமர்சனத்துக்கு நெற்றியடி பதில்கொடுத்த தேஜஸ்வி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட்டில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 15 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. இதில் தொலைக்காட்சி நடிகை தேஜஸ்வி பிரகாஷ் வெற்றிப்பெற்றார். இவரது வெற்றியை சிலர் விமர்சித்ததைத் தொடர்ந்து தேஜஸ்வி கடுமையான பதிலடி கொடுத்து ரசிகர்களையே அசர வைத்திருக்கிறார்.
இந்தியில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி 24 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக்பாஸ் சீசன் 15 நிகழ்ச்சி ஜனவரி 30 ஆம் தேதி முடிவடைந்தது. இதில் தேஜஸ்வி பிரகாஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு தங்கப்பதக்கம் மற்றும் ரூ.40 லட்சம் பரிசுத்தொகையை தட்டிச்சென்றார். ரன்னராக பிரதிக் செஹாஜ்பால் இரண்டாவது இடத்தையும் கரண் குந்த்ரா மூன்றாவது இடத்தையும் பிடித்திருந்தனர்.
இதையடுத்து ரன்னர் பிரதிக் செஹாஜ்பால், தேஜஸ்வியின் வெற்றியை பாராட்டியதோடு தகுதியான வெற்றியாளர் எனவும் கூறியிருந்தார். ஆனால் சில இந்தி பிரபலங்கள் கரண் குந்த்ராவே உண்மையான வெற்றியாளர் என அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்தனர்.
இன்னும் ஒருபடி மேலே சென்று பிக்பாஸ் சீசன் 7 இன் வெற்றியாளரான கௌஹர் கான் தகுதியான வெற்றியாளர் ஒருவரே இருக்கிறார். நீங்களே இதயங்களை வென்றவர் என்று கரண் குந்த்ராவிற்கு ஆதரவாகத் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிரங்கமாகக் கருத்து வெளியிட்டு இருந்தார்.
இதனால் விரக்தியடைந்த பிக்பாஸ் 15 வெற்றியாளர் தேஜஸ்வி பிரகாஷ் நான் வெற்றிப்பெற்றது போலியாகத் தெரியவில்லை. இந்த சீசனின் முடிவை சந்தேகிப்பவர்கள் முந்தைய சீசன்களின் முடிவுகளைப் பற்றியும் அலச வேண்டும்.
எனது வெற்றியை மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று நான் ஏன் எதிர்ப்பபார்க்க வேண்டும்? நான் வெற்றிப்பெற்றதில் எனது குடும்பத்தினரும் நானும் மகிழ்ச்சியடைய வேண்டும். எனது ரசிகர்கள் எனது கடின உழைப்புக்கு பலன் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். என்னை வெறுப்பவர்கள் ஏன் நான் வெற்றிப்பெற்றதில் மகிழ்ச்சியடைய வேண்டும்? எல்லோரும் என்னை நேசிப்பதற்கு நான் ஐஸ்கிரீம் அல்ல. நான் மனுஷி எனப் பதில் அளித்துள்ளார். இந்தப் பதில் இந்தி சினிமா வட்டாரத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொலைக்காட்சி பிரபலமான நடிகை தேஜஸ்வி பிரகாஷ் பல வெற்றிகரமான தொடர்களில் நடித்து இந்தி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற ஒருவராக இருந்துவருகிறார். தற்போது பிக்பாஸ் சீசனில் வெற்றிப்பெற்று தங்கக்கோப்பை மற்றும் ரூ.40 லட்சம் ரொக்கத்தை தட்டிச்சென்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments