நல்லவேளை டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டது: அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சீனாவின் செயலியான டிக்டாக் சமீபத்தில் இந்தியாவில் தடை செய்யப்பட்டது தெரிந்ததே. இந்த செயலியால் ஏராளமான இளம் பெண்கள் கலாச்சாரத்தை மதிக்காமல் தவறான பாதையில் செல்வதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் நல்ல வேளையாக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த டிக்டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டது.
இந்த நிலையால் டீன் ஏஜ் குழந்தைகள் ஆபத்தான ஒரு சேலஞ்சை டிக்டாக்கில் எடுத்து உயிருக்கு ஆபத்தை விளைவித்து வருகின்றனர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது டிக்டாக்கில் பரவலாக பரவி வரும் ஒரு சேலஞ்ச் ‘பெனட்ரில் சேலஞ்ச். இந்த சேலஞ்சில் குழந்தைகள் அதிகப்படியான பெனட்ரியல் என்ற மாத்திரைகளை ஒரே நேரத்தில் சாப்பிட்டு சேலஞ்சை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் டாஸ்க்.
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ‘பெனட்ரில் என்ற மாத்திரையை அதிக அளவில் சாப்பிடும் ஆபத்தான சேலஞ்சை டீன் ஏஜ் குழந்தைகள் செய்து வருவதால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். சமீபத்தில் ஒக்லஹாமா என்ற பகுதியில் 15 வயது சிறுமி இதுபோன்ற ஒரு சேலஞ்சை எடுத்து மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் ஒருசில டீன் ஏஜ் குழந்தைகள் இந்த சேலஞ்சை எடுத்து 10 முதல் 14 மாத்திரைகள் வரை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
கொரோனா வைரஸ் நேரத்தில் ஏற்கனவே மருத்துவர்கள் சவாலான நிலையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருக்கும் நிலையில் இதுபோன்ற ஆபத்தான சேலஞ்சுகளில் சிக்கி தற்கொலை முயற்சிகளில் ஈடுபடும் குழந்தைகளையும் காப்பாற்றும் பொறுப்பு மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக எந்தவிதமான பொழுதுபோக்குகளும் இல்லாமல் வீட்டிலேயே இருக்கும் குழந்தைகள் இது போன்ற ஆபத்தான சேலஞ்சுகளை எடுத்து வருவதாகவும் அம்மாதிரியான குழந்தைகளை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout