ஒத்தை ஆளாக இருந்து 75 உயிர்களைக் காப்பாற்றிய சிறுவன்… குவியும் பாராட்டு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
மகாராஷ்டிராவில் 18 வயது சிறுவன் தனி ஆளாக இருந்து தன்னுடைய பெற்றோர் உட்பட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 75 நபர்களைக் காப்பாற்றி இருக்கிறான். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த வியாழக்கிழமை மகாராஷ்டிராவின் கோபார் பகுதியில் உள்ள 2 மாடிக்கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பு திடீரென சரிந்து விழ ஆரம்பித்து இருக்கிறது.
இதை விடியற்காலை 2 மணிக்கு வெப் சீரியஸ் பார்த்துக் கொண்டிருந்த 18 வயது சிறுவன் குணால் மோஹைட் கவனித்து இருக்கிறான். முதலில் பார்த்தபோது குணாலின் வீட்டு சமயலறை முழுக்க அப்படியே சரிந்து விழுந்து இருக்கிறது. கூடவே மணலும் தூசியுமாகப் பறந்து இருக்கிறது. இதைப் பார்த்து பயப்படாத அச்சிறுவன் உடனே சுதாரித்துக் கொண்டு தன்னுடைய பெற்றோர்களை அவசரமாக எழுப்பி இருக்கிறான்.
அடுத்ததாக அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டில் உள்ள அனைவரையும் கத்திக் கூப்பாடு போட்டு எழுப்பவும் செய்திருக்கிறான். சிறுவன் எச்சரித்ததைத் தொடர்ந்து அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 75 பேரும் பத்திரமாக வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர். இச்சம்பவம் நடந்து முடிந்த சில நிமிடங்களில் அந்த அடுக்குமாடி கட்டிடம் முழுவதுவமாக சரிந்து விழுந்ததாக கோபார் பகுதியில் உள்ள மாநகராட்சி துறை அலுவலர்கள் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
கடந்த 9 மாதங்களுக்கு முன்னதாக இந்த கட்டிடம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே குடியிருப்பு வாசிகள் இந்தக் கட்டிடத்தை விட்டு காலி செய்து கொள்ளவும் என கோபார் பகுதியின் மாநகராட்சி அலுவலர்கள் எச்சரிக்கை செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் வீட்டை விட்டு காலி செய்யாமல் தொடர்ந்து அந்தக் குடியிருப்பு வாசிகள் அங்கேளே வசித்து வந்ததால் இந்த விபரீதம் ஏற்பட்டு இருக்கிறது. எப்படியோ சிறுவன் குணால் வெப் சீரியஸ் பார்த்துக் கொண்டிருந்ததை அடுத்து உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில் சிறுவன் குணால் மோஹைட்டுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Maharashtra: 75 occupants of a 2-storey building in Kopar, Dombivli saved by a young boy as building collapsed on 29th Oct early morning.
— ANI (@ANI) October 30, 2020
"While watching web-series till dawn, I saw part of kitchen falling down & alerted everyone to vacate the building," says 18-yr old Kunal pic.twitter.com/p2b6qOMSr2
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout