ஆணுறுப்பை அளக்க முயன்ற சிறுவன்… ஆபத்தில் முடிந்த சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த சிறுவன் தன்னுடைய ஆணுறுப்பு எந்த அளவில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள விரும்பி இருக்கிறான். இதற்காக தனது அறையில் இருந்த USB கேபிள் வயரை எடுத்து ஆணுறுப்பில் செலுத்தியபோது அது உள்ளுக்குள்ளேயே சிக்கிக்கொண்ட சம்பவம் கடும் ஆபத்தில் போய் முடிந்திருக்கிறது.
ஆணுறுப்பை குறித்து உலகத்தில் உள்ள எல்லா ஆண்களுக்கும் ஒரே ஒரு கவலைதான். தனக்கு பெரிய ஆணுறுப்பு இருக்க வேண்டும் என்பது. இதில் எந்தவிதமான அறிவியல் உண்மை இல்லையென்றாலும் உலகம் முழுக்கவே இதுபோன்ற மடத்தனமான நம்பிக்கை பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கத்தான் செய்கிறது. இந்த விபரீத எண்ணம் சிறுவர்களாக இருக்கும்போதே சிலருக்கு வரத்துவங்கி விடுகிறது.
அந்த வகையில் பிரிட்டனை சேர்ந்த 15 வயது சிறுவன் தன்னுடைய ஆணுறுப்பு எந்த அளவில் இருக்கிறது என அளந்து பார்க்க முயற்சித்து இருக்கிறான். இதற்காக தனது அறையில் இருந்த கேபிள் வயரை எடுத்து அதைத் தனது ஆணுறுப்புக்குள் செலுத்தி இருக்கிறான். அந்த கேபிள் வயர் ஒரு கட்டத்தில் பிறப்புறுப்புக்குள் சிக்கிக் கொண்டு ரத்தம் வெளியேறத் துவங்கி இருக்கிறது. இதனால் பயந்துபோன சிறுவன் தனது பெற்றோர்களை அழைத்து விஷயத்தை கூறியிருக்கிறான்.
இதையடுத்து பெற்றோர்கள் சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அங்கு சிறுவனின் ஆணுறுப்பை ஸ்கேன் செய்துபார்த்த மருத்துவர்கள் அவசரச் சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும் ஆணுறுப்பில் சிக்கிக்கொண்ட கேபிளில் முடிச்சு இருந்ததால் அந்த மருத்துவர்கள் லண்டன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு பரிந்துரை செய்திருக்கின்றனர்.
இதனால் லண்டன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து கேபிளை அகற்றி உள்ளனர். மேலும் சிறுவனின் அணுறுப்பில் உள்காயம் எதுவும் இல்லை என்பதையும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்தச் சம்பவத்தையடுத்து ஆணுறுப்பில் இப்படி பொருளை சொருகி பார்ப்பது மிகவும் ஆபத்தான விஷயம் என்று கூறிய மருத்துவர்கள் ஒரேநாளில் சிறுவனை டிஜ்சார்ஜ் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com