கல்லூரி வளாகத்திற்குள் இளம் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை… உபியில் தொடரும் அவலம்…
Send us your feedback to audioarticles@vaarta.com
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஹத்ராபாஸ் பாலியல் வழக்கு தவிர உத்திரப்பிரதேசத்தின் அலிகார் பகுதியில் கடந்த மாதம் இன்னொரு ஒரு பாலியல் வழக்கும் பதிவானது. இந்த இரண்டு வழக்குகளின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே தற்போது மேலும் ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் அம்மாநிலத்தில் அரங்கேறி இருக்கிறது. அதுவும் போலீஸார் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு கல்லூரி வளாகத்திற்குள் என்பதுதான் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 4 ஆம் தேதி நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளின்போது ஜான்சி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியிலும் இத்தேர்வு நடைபெற்றது. சிவில் சர்வீஸ் தேர்வு என்பதால் அந்தக் கல்லூரியில் போலீசார் முதற்கொண்டு அதிகாரிகள் பலரும் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கல்லூரிக்கு 17 வயது இளம்பெண் ஒருவர் தன்னுடைய நண்பரைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறார்.
கல்லூரி வாயிலில் இந்தப் பெண்ணை பார்த்த சில மாணவர்கள் அவரை மிரட்டி கல்லூரி வளாகத்திற்குள் இழுத்துச் சென்று பின்பு அங்குள்ள மாணவர்கள் விடுதிக்கும் அழைத்துச் சென்று இருக்கின்றனர். அப்போது ஒரு மாணவன் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான். இதை பக்கத்தில் உள்ள பல மாணவர்கள் வேடிக்கை பார்த்ததோடு வீடியோவாக எடுத்திருக்கின்றனர். மேலும் ஒருவேளை நீ வெளியே சென்று இங்கு நடந்ததைக் கூறினால் இந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டு விடுவோம் என அந்த இளம்பெண்ணை மிரட்டி இருக்கின்றனர். அதோடு அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் பணத்தையும் பிடுங்கிக் இருக்கின்றனர். இதனால் பயந்துபோன அவர் அழுதுகொண்டே சாலையில் நடந்து சென்றிருக்கிறார்.
இதைப் பார்த்த காவலர்கள் என்ன நடந்தது என அப்பெண்ணிடம் விசாரித்து இருக்கின்றனர். விஷயத்தைக் கேட்ட போலீசார் உடனே விரைந்து செயல்பட்டு மாணவர் விடுதியில் இருந்த 8 மாணவர்களைக் கொத்தாக அள்ளிக்கொண்டு காவல் நிலையத்திற்கும் விரைந்து இருக்கின்றனர். பின்பு மாணவிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இதனால் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய 8 மாணவர்களின்மீதும் இந்தியத் தண்டனை சட்டம் 376 டி (கும்பல் கற்பழிப்பு குற்றச்சாட்டு), 386 (மிரட்டிப் பணம் பறித்தல்), 323 (காயத்தை ஏற்படுத்துதல்), மற்றும் 120 பி (கிரிமினல் சதி) மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 66 டி உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout