கல்லூரி வளாகத்திற்குள் இளம் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை… உபியில் தொடரும் அவலம்…

  • IndiaGlitz, [Tuesday,October 13 2020]

 

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஹத்ராபாஸ் பாலியல் வழக்கு தவிர உத்திரப்பிரதேசத்தின் அலிகார் பகுதியில் கடந்த மாதம் இன்னொரு ஒரு பாலியல் வழக்கும் பதிவானது. இந்த இரண்டு வழக்குகளின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே தற்போது மேலும் ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் அம்மாநிலத்தில் அரங்கேறி இருக்கிறது. அதுவும் போலீஸார் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு கல்லூரி வளாகத்திற்குள் என்பதுதான் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 4 ஆம் தேதி நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளின்போது ஜான்சி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியிலும் இத்தேர்வு நடைபெற்றது. சிவில் சர்வீஸ் தேர்வு என்பதால் அந்தக் கல்லூரியில் போலீசார் முதற்கொண்டு அதிகாரிகள் பலரும் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கல்லூரிக்கு 17 வயது இளம்பெண் ஒருவர் தன்னுடைய நண்பரைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறார்.

கல்லூரி வாயிலில் இந்தப் பெண்ணை பார்த்த சில மாணவர்கள் அவரை மிரட்டி கல்லூரி வளாகத்திற்குள் இழுத்துச் சென்று பின்பு அங்குள்ள மாணவர்கள் விடுதிக்கும் அழைத்துச் சென்று இருக்கின்றனர். அப்போது ஒரு மாணவன் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான். இதை பக்கத்தில் உள்ள பல மாணவர்கள் வேடிக்கை பார்த்ததோடு வீடியோவாக எடுத்திருக்கின்றனர். மேலும் ஒருவேளை நீ வெளியே சென்று இங்கு நடந்ததைக் கூறினால் இந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டு விடுவோம் என அந்த இளம்பெண்ணை மிரட்டி இருக்கின்றனர். அதோடு அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் பணத்தையும் பிடுங்கிக் இருக்கின்றனர். இதனால் பயந்துபோன அவர் அழுதுகொண்டே சாலையில் நடந்து சென்றிருக்கிறார்.

இதைப் பார்த்த காவலர்கள் என்ன நடந்தது என அப்பெண்ணிடம் விசாரித்து இருக்கின்றனர். விஷயத்தைக் கேட்ட போலீசார் உடனே விரைந்து செயல்பட்டு மாணவர் விடுதியில் இருந்த 8 மாணவர்களைக் கொத்தாக அள்ளிக்கொண்டு காவல் நிலையத்திற்கும் விரைந்து இருக்கின்றனர். பின்பு மாணவிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இதனால் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய 8 மாணவர்களின்மீதும் இந்தியத் தண்டனை சட்டம் 376 டி (கும்பல் கற்பழிப்பு குற்றச்சாட்டு), 386 (மிரட்டிப் பணம் பறித்தல்), 323 (காயத்தை ஏற்படுத்துதல்), மற்றும் 120 பி (கிரிமினல் சதி) மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 66 டி உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

More News

22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழ் ஹீரோவுடன் இணையும் ஐஸ்வர்யாராய்?

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தை தமிழில் ரீமேக் செய்ய பிரபல தயாரிப்பாளரும் நடிகர் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் திட்டமிட்டிருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

5 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் தனுஷ்-அனிருத்? அட்டகாசமான தகவல்

தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' மற்றும் 'கர்ணன்' ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது அவர் இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

ஒரே நேரத்தில் இரண்டு பிரபலங்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: தமிழ் திரையுலகில் பரபரப்பு

அரசியல் மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது கடந்த சில மாதங்களாக சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது

அப்படியெல்லாம் போக முடியாது பதில் சொல்லிட்டு போங்க: ரியோவிடம் மீண்டும் சிக்கிய சுரேஷ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே அனிதா சம்பத் கூறியதுபோல் புரமோவில் வரவேண்டும் என்பதற்காகவே வேண்டுமென்றே சுரேஷ் சக்ரவர்த்தி அனைவரிடமும் பிரச்சனை செய்கிறாரே என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது 

கொரோனாவுக்கே டஃப் கெடுக்கும் புது வைரஸ்… சென்னை, மதுரையில் பாதிப்பை ஏற்படுத்துவதாகப் பரபரப்பு!!!

கொரோனா வைரஸை ஒழிக்க முடியாமல் உலகமே தவித்து வரும் நிலையில் குழந்தைகளைத் தாக்கும் புதிய வைரஸ் சென்னை மற்றும் மதுரையில் பரவி வருவதாகக் கூறப்படுகிறது.