ஆன்லைன் விளையாட்டால் மூளையில் ரத்தக் கசிவு! 16 வயது மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்!
- IndiaGlitz, [Thursday,February 04 2021]
சமீபகாலமாக இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி அல்லது பெட்டில் தோற்றுபோனதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் பகீர் ஏற்படுத்தும் விதமாக தற்போது புதுச்சேரியை சேர்ந்த 16 வயது மாணவன் ஆன்லைன் விளையாட்டால் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுச்சேரி அடுத்த வில்லியனூர் பகுதியில் வசித்து வரும் 12 ஆம் வகுப்பு மாணவன் தர்ஷன். இவர் கடந்த திங்கள் கிழமை காலை முதல் மாலை வரை ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொணடுள்ளார். பின்னர் காதில் ஹெக்செட்டை மாட்டிக் கொண்டு அதிகச் சத்ததோடு நீண்டநேரம் ஃபயர்வால் விளையாடி இருக்கிறார். இப்படி விளையாடி கொண்டு இருந்தபோது தர்ஷன் திடீரென மயங்கி விழுந்து இருக்கிறார். இதனால் பதறிப்போன அவருடைய பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். பின்னர் அங்கிருந்த மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தர்ஷனை சோதித்த மருத்துவர்கள் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்ததாகத் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் நீண்ட நேரம் காதில் ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு சத்தமாக ஆன்லைன் கேம் விளையாடியதால் இந்த விபரீதம் ஏற்பட்டு இருக்கிறது என மருத்துவப் பரிசோதனை அளிக்கப்பட்டு இருக்கிறது. பொதுவாக தலையில் அடிபடும்போதோ அல்லது மூளையில் ஏற்படும் நரம்பியல் கோளாறுகளின்போதோ இப்படி ரத்தக் கசிவு ஏற்படும். ஆனால் ஆன்லைன் கேம் விளையாடியதால் ஒரு மாணவன் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.