16 வயது சிறுமியின் ரொமான்ஸ் வீடியோ: குழந்தைகள் நல அலுவலகம் எடுத்த அதிரடி நடவடிக்கை!

  • IndiaGlitz, [Thursday,May 13 2021]

சமூக வலைதளங்களில் ரொமான்ஸ் வீடியோ வெளியிட்ட 16 வயது சிறுமி குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் என்ற பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் சென்னையை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியதை அடுத்து இருவரும் சமூக வலைதளங்கள் மூலம் பல வீடியோ மெசேஜ்களை பகிர்ந்து கொண்டனர். இந்த விவரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்தும், அவர்களும் இந்த காதல் வீடியோக்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர் என்பது தான் பெரும் ஆச்சரியம்

இந்த நிலையில் சிறுமியின் ரொமான்ஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் குழந்தைகள் காப்பக அலுவலத்திற்கு சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் குழந்தைகள் காப்பக அலுவலர், காவல்துறையினர் உதவியுடன் சிறுமியிடம் விசாரணை செய்தனர். இதனையடுத்து அந்த சிறுமி கடலூர் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் இது குறித்து அந்த சிறுமி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் லைக்ஸ் வேண்டும் என்பதற்காக விளையாட்டுத்தனமாக அந்த வீடியோவை தான் பதிவு செய்ததாகவும், அந்த வீடியோவால் பல பிரச்சினைகள் ஏற்பட்டு தற்போது தான் ட்ரோல் செய்யப்பட்டு வருவதாகவும், தான் செய்தது தவறு என்பதை ஒப்புக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்

மேலும் தன்னுடைய வயது உள்ளவர்கள் இதேபோல் செய்யக்கூடாது என்பதற்கான தான் ஒரு உதாரணம் என்றும் தன்னுடைய செயலுக்காக தான் மிகுந்த வருந்துவதாகவும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்

More News

காண்டம் பரிசோதனையாளர் கேரக்டரில் சூர்யா-கார்த்தி பட நாயகி!

சூர்யா மற்றும் கார்த்தி நடித்த படங்களில் நாயகியாக நடித்த நடிகை ஒருவர் காண்டம் பரிசோதனையாளர் கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

எதிர்க்கட்சியாக இருந்தபோது ரூ.1 கோடி, முதல்வரான பின் ரூ.25 லட்சமா? ஸ்டாலினுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி!

கொரோனாவால் உயிரிழக்கும் முன்கள பணியாளர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி தரவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கூறிய ஸ்டாலின் தற்போது முதல்வரான பின் 25 லட்சம் மட்டுமே

கொரோனாவால் நிரம்பி வழியும் சென்னை மருத்துவமனைகள்… நிலவரம் என்ன?

கொரோனா நோய்த்தொற்றின் முதல் அலை காலத்தில் ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதிகபட்சமாக தினம்தோறும் 7 ஆயிரம் புதிய பாதிப்புகள் ஏற்பட்டன

ஊரடங்கிலும் ரெட் அலார்ட்...  தருமபுரியின் அவலத்தை கூற எம்.பி  போட்ட டுவிட்...!

தருமபுரி மாவட்டத்தில் நாளுக்கு நாள்  நிலைமை மோசமாகி  வருவதால் அங்கு, ரெட் அலர்ட்  போடவேண்டும் என திமுக எம்பி டுவிட் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி, குழந்தைகளைப் பார்க்க வேண்டும்? அசால்ட்டா பேருந்தையே திருடிய இளைஞர்!

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாகப் தற்போது பல்வேறு மாநிலங்களில் பொது ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் போக்குவரத்து