நாயுடன் செல்பி: இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்

இன்றைய இளைஞர்களிடம் செல்பி மோகம் மிகவும் அதிகம் உள்ளது என்பதும் மிகவும் ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்து ஆபத்தில் மாட்டிக் கொள்வதும் சில சமயம் உயிரிழப்பதுமான சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருவதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் 17 வயது இளம்பெண் ஒருவர் நாயுடன் செல்பி எடுக்க முயன்றதால் ஏற்பட்ட விபரீத சம்பவம் அர்ஜெண்டினாவில் நடந்துள்ளது. இது குறித்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது.

அர்ஜெண்டினாவை சேர்ந்த லாரா சன்சோன் என்ற 17 வயது இளம்பெண் தனது தோழியின் ஜெர்மன் ஷெப்பர்ட் நாயுடன் விதவிதமான போஸ்களில் செல்ஃபி எடுத்தார். அப்போது அவரது நாயின் வாயில் அருகே தனது முகத்தை வைத்து அவர் செல்பி எடுக்க முயன்ற போது திடீரென அவர் முகத்தை முகத்தில் கடித்தது. இதனால் முகம் முழுவதும் படுகாயம் அடைந்த அவருக்கு 40 தையல்கள் போடப்பட்டு உள்ளது.

செல்லப் பிராணிகளுடன் செல்பி எடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அத்துமீறி செல்பி எடுத்தால் இதுபோன்ற விபரீதங்கள் நடக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

எதிர்பாராத சந்திப்பு: பிரபல அரசியல்வாதி சந்திப்பு குறித்து மீராமிதுன்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சியிலும் சரி, அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னரும் சரி, மீராமிதுன் ஒரு சர்ச்சைக்குரியராகவே காணப்பட்டார். அவர் அளித்த பேட்டிகள், கூறிய கருத்துக்கள்

சூர்யாவின் 'சூரரை போற்று' புதிய அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்!

நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிவரும்  'சூரரை போற்று'படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே 

த்ரிஷா நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலில் '96' கனெக்சன்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் நடிகை த்ரிஷா நடித்த '96' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது இந்த படத்தில் இடம்பெற்ற ராம் மற்றும் ஜானு கேரக்டரை படம் பார்த்த யாராலும்

அடிமுறை'க்காக சினேகா செய்த அர்ப்பணிப்பு

தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகிய 'பட்டாஸ் திரைப்படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

உதயநிதியுடன் நேருக்கு நேர் மோதும் வைபவ்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சைக்கோ' திரைப்படம் வரும் 24ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதே தேதியில் வைபவ் நடித்துள்ள