தனது நிர்வாணப் புகைப்படத்தை ஷேர் செய்த சிறுமி… அதிர்ச்சியில் பெற்றோருக்கு நடந்த விபரீதம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
குஜராத் மாநிலத்தில் சிறுமி ஒருவர் தன்னுடைய நிர்வாணப் புகைப்படத்தை தானே இணையத்தில் பதிவிட்டு உள்ளார். இதைக்கேட்ட அவரது பெற்றோர் இருவருக்கும் ஒரே நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு கடும் பீதி அடைந்துள்ளனர்.
ஆன்லைன் வகுப்புகளுக்காக 15 சிறுமி ஒருவருக்கு அவரது பெற்றோர் ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளனர். அதோடு எந்த தொந்தரவும் இல்லாமல் ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பதற்காகத் தனி அறையையும் கொடுத்துள்ளனர். அதில் இருந்து கொண்டு ஆன்லைன் வகுப்புகளை கவனித்துவந்த அந்த சிறுமி இணைய பயன்பாட்டிற்கு அடிமையாகியதோடு ஒரு கட்டத்தில் தன்னை நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்து அந்தப் புகைப்படத்தை தானே ஆன்லைனில் பதிவேற்றி உள்ளார்.
கூடவே தன்னுடைய உறவுக்கார சிறுமி ஒருவரின் புகைப்படத்தையும் இதேபோல பதிவிடுமாறு அவரை தொந்தரவு செய்துள்ளார். சிறுமியின் செயலை பொறுத்துக்கொள்ளாத உறவினர் வீட்டு பெண் தன்னுடைய பெற்றோர்களிடம் விஷயத்தை கூற, அந்த பெற்றோர் சிறுமியின் எதிர்காலமே வீணாகிவிடும் எனப் பயந்து உடனே விஷயத்தை தெரியப்படுத்தி உள்ளனர்.
ஆனால் விஷயத்தை கேட்ட சிறுமியின் பெற்றோர் இருவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டதோடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அதற்கு பின்னர் வீடு திரும்பிய அவர்கள் மனநல மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று விளக்கம் அளித்தப்பின்பு அந்த சிறுமி இனிமேல் இதுபோல செய்யமாட்டேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments