T20 கிரிக்கெட் போட்டி- உலகத் தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய பெண்மணி
Send us your feedback to audioarticles@vaarta.com
T20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் விளையாடி வரும் 16 வயதே ஆன சபாலி வர்மா தான் தற்போது உலகின் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார் .உலகக் கோப்பை T20 போட்டியில் துவக்க ஆட்டக் காரராக களம் இறங்கிய சபாலி வர்மா 4 ஆட்டங்களில் 161 ரன்களை குவித்து இந்திய அணிக்கு பெரிய வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார்.
அசுரத்தனமான பேட்டிங்கின் மூலம் இந்திய ரசிகர்களின் மனதை கவர்ந்த சபாலி வர்மா உலகத் தர வரிசையில் முதல் இடம் பிடித்து இருப்பது இந்தியர்களை மகிழ்ச்சி கடலில் தள்ளியிருக்கிறது. T20 உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு 19 ஆம் இடத்தில் இருந்த சபாலி வர்மா தற்போது ஒரே அடியாக உயர்ந்து முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.
இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 6 ஆம் இடத்தில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. இளம் விராங்கனையான சபாலி வர்மா உலக அளவில் நட்சத்திர ஆட்டக் காரராக மாறியிருப்பது பெண்கள் மத்தியில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments