ஆர்யா-சாயிஷாவுக்காக இணைந்த அனிருத்-இமான்!

  • IndiaGlitz, [Wednesday,February 26 2020]

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்றான ஆர்யா-சாயிஷா முதல் முறையாக ஜோடியாக இணைந்து நடித்து வரும் திரைப்படம் ’டெடி’. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஏற்கனவே சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அடுத்த சிங்கிள் பாடல்லான ’நண்பியே’ என்று தொடங்கும் பாடல் வரும் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்

மதன் கார்க்கி எழுதிய இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார் என்பதும் இந்தப் பாடலை இசையமைப்பாளர் டி.இமான் கம்போஸ் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இயக்குனர் சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த பாடல் குறித்து இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன் கூறியபோது, ‘இந்த படத்திற்காக இமான் கம்போஸ் செய்த ஒவ்வொரு பாடலும் அவருடைய இதயத்தில் இருந்து வந்தவை. நட்பின் உயர்வை எடுத்துரைக்கும் இந்த பாடலை மதன்கார்க்கி எழுத அனிருத் பாடியுள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

More News

ஆன்லைனில் ஆர்டர் செய்த நடிகையின் போன் நம்பரை ஆபாச தளத்தில் பகிர்ந்த வாலிபர்!

ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்த பிரபல நடிகையின் மொபைல் நம்பரை ஆபாச தளத்தில் பதிந்த பீட்சா டெலிவரி பாய் செய்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஒரு வாரத்திற்கு பின்னர் 'இந்தியன் 2' விபத்து குறித்து டுவிட் செய்த ஷங்கர் 

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் நடைபெற்றுக்

சீயான் விக்ரமின் 'கோப்ரா' படத்தின் புதிய அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்

சீயான் விக்ரம் நடிப்பில், 'டிமாண்டி காலனி, 'இமைக்கா நொடிகள்' இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் 'விக்ரமின் 58வது படமான 'கோப்ரா

பயம் தேவையில்லை.. டெல்லி தெருக்களில் யாரும் துப்பாக்கியோடு நடமாட முடியாது..! அஜித் தோவால்.

குற்றவாளிகள் அனைவரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், டெல்லி சாலைகளில் யாரும் கையில் துப்பாக்கியுடன் சுற்ற முடியாது என்று அவர் கூறினார்.

உலக நாடுகளில் இதுவரை கொரோனா படுத்தி இருக்கும் பாடு!!!

கோவிட் – 19 என்று அழைக்கப் படும் கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் கண்டுபிடிக்கப் பட்டது.