ஹாலிவுட் படத்தின் ரீமேக் படமா 'டெடி'? இயக்குனர் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆர்யா, சாயிஷா இணைந்து நடித்துள்ள ‘டெடி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஷக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கடந்த பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
அதேபோல் தற்போது பிரபல பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுத்தில் டி. இமான் இசையில் அனிரூத் குரலில் "எந்தன் நண்பியே நண்பியே.. என்னை இழுக்கும் இன்பியே.." என்று அழகாகத் தொடங்கும் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே ஹாலிவுட்டில் வெளியான 'டெட் 2' என்றா படத்தின் ரீமேக் தான் இந்த 'டெடி' படம் என்று பலரும் கூறிய நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்த இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் ’டெட் 2’ படத்திற்கும் 'டெடி' படத்திற்கும் ஒரு ஒற்றுமை கூட இல்லை என்றும் இந்த படம் குழந்தைகள் மற்றும் குடும்பமாக வந்து மக்கள் பார்க்கும் வண்ணம் உருவாகிய ஆக்ஷன் திரில்லர் படம் என்றும் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout