கொரோனா தடுப்பு பணியில் களமிறங்கிய அஜித்தின் 'தக்ஷா' டீம்!
- IndiaGlitz, [Saturday,May 08 2021]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த அஜித்தின் ’தக்ஷா’ டீம் களம் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அஜித்தின் தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ’தக்ஷா’ டீம் உருவாக்கிய ‘ட்ரோன்’ இந்திய அளவில் நடைபெற்ற கல்லூரிகளுக்கான போட்டியில் முதலிடத்தைப் பெற்றது என்பதும் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் முதல் அலை ஏற்பட்டபோது அஜித்தின் ’தக்ஷா’ டீம் தமிழகத்தில் உள்ள பல இடங்களில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளித்து வந்தது என்பதும் இந்த டீம் செய்த பணிகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் தற்போதும் அஜித்தின் ’தக்ஷா’ டீம் களமிறங்கியுள்ளது. திருநெல்வேலியில் உள்ள முக்கிய இடங்களில் ’தக்ஷா’ டீம் கிருமி நாசினி தெளித்து வருகிறது. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து அஜீத் ரசிகர்கள் இந்த வீடியோவை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Team #Dhaksha arrived in Tirunelveli For Sanitizing around Moreover Cities...!! #Valimai #AjithKumar pic.twitter.com/JScDHBuJJl
— AJITH TEAM ONLINE ™ (@ATO_OFFL) May 8, 2021