close
Choose your channels

வெற்றியை கொண்டாடிய அருவி -சென்னை 2 சிங்கப்பூர் டீம்

Tuesday, December 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த ஆண்டில் பெரிய பட்ஜெட் படங்கள், பெரிய ஸ்டார்களின் படங்களின் வெற்றிகளே சர்ச்சைக்குரிய வகையில் பேசப்பட்டு கொண்டிருந்த நிலையில், எந்தவித பரபரப்பும் இன்றி, பெரிய எதிர்பார்ப்புகளும் இன்றி வெளியான சின்ன பட்ஜெட் படங்கள் நல்ல வெற்றியையும் வரவேற்பையும், வசூலையும் பெற்று வந்துள்ளது. 

குறிப்பாக இந்த ஆண்டு வெளியான மாநகரம், கடுகு, 8 தோட்டாக்கள், இவன் தந்திரன், மேயாத மான், அவள், தரமணி, போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் நல்லவரவேற்பையும் வசூலையும் பெற்று வெற்றிப்படங்களாக திகழ்கிறது. எனவே 2017ஆம் ஆண்டு என்பது புதுமுகங்களின் ஆண்டு என்றே கூறலாம்

அந்த வரிசையில் கடந்த வாரம் வெளிவந்த அருவி மற்றும் சென்னை 2 சிங்கப்பூர் ஆகிய இரண்டு படங்களும் நல்ல விமர்சனத்தை பெற்று வெற்றி படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. இந்த நிலையில் இந்த இரு படங்களின் குழுவினர்களும் சமீபத்தில் சந்தித்து வெற்றியை இணைந்து கொண்டாடியதோடு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். இந்த சந்திப்பில் அருவி நாயகி அதிதிபாலன், ஜிப்ரான் உள்பட இருபடக்குழுவினர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment