செல்பி இருந்தால்தான் அட்டெண்டன்ஸ்: பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய விதி

  • IndiaGlitz, [Wednesday,July 10 2019]

காலை 8 மணிக்கு பள்ளிக்கு வருகை தந்து ஆசிரியர்கள் அவரவர் வகுப்பறை முன் செல்பி எடுத்து அனுப்பினால் மட்டுமே அவர்களுடைய வருகைப்பதிவேடு உறுதி செய்யப்படும் என்றும் அவ்வாறு செய்ய தவறும் ஆசிரியர்களுக்கு அந்த நாளின் சம்பளம் கட் ஆகும் என்றும் உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பாராபாங்கி என்ற மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியைகள் சரியாக 8 மணிக்கு வகுப்பறையில் ஆஜராகி, வகுப்பறை முன் ஒரு செல்பி எடுத்து அதனை ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். காலை 8 மணிக்குள் செல்பி புகைப்படத்தை பதிவு செய்யாதவர்கள் ஒருநாள் சம்பளத்தை இழக்க நேரிடும்.

இந்த நடைமுறை சோதனையோட்டமாக பாரபாங்கி மாவட்டத்தில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த புதிய செல்பி நடைமுறைக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போக்குவரத்தில் சிக்கல், டிராபிக் பிரச்சனை, இண்டர்நெட் பிரச்சனை ஆகியவற்றால் சில சமயம் சில நிமிடங்கள் தாமதமாக செல்பி அனுப்பினாலும் அன்றைய நாளின் சம்பளத்தை இழக்க வேண்டிய நிலை இருப்பதாக ஆசிரியர்கள் குறைகூறியுள்ளனர்.