ஆசிரியர் ஸ்டிரைக் எதிரொலி: மாணவர்களுக்கு பாடம் எடுத்த சேலம் பெண் கலெக்டர்
- IndiaGlitz, [Thursday,September 07 2017]
சமீபத்தில் சேலம் மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டராக பதவியேற்ற ரோகிணி அவர்கள் மாற்றுத்திறனாளிகளிடம் கனிவுடன் நடந்து கொண்டதால் பெரும் பாராட்டுக்களை பெற்றார் என்பது அனைவரும் அறிந்ததே. பொதுமக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வரும் கலெக்டர் ரோகிணி இன்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் கருத்தராஜபாளையம் என்ற கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு சென்றார்
தற்போது ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் நடந்து வருவதால் அந்த பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுக்க ஆசிரியர் இல்லாத நிலையை பார்த்து உடனே வகுப்புக்கு சென்று அவரே பாடம் நடத்தினார். கலெக்டரின் செயல் அந்த பகுதி மக்கள் அனைவரையும் வியப்படைய செய்தது.
கலெக்டர் ரோகிணி பதவியேற்ற முதல் நாளிலேயே சேலம் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று அங்குள்ள நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து அந்த குறைகளை நிவர்த்தி செய்ய உத்தரவிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.