ஆசிரியர் கேரக்டர்களில் அசத்திய தமிழ் திரையுலக பிரபலங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று நாடு முழுவதும் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் ஆசிரியர் கேரக்டர்களில் நடித்தது குறித்து தற்போது பார்ப்போம்
சிவாஜி கணேசன் - ஆண்டவன் கட்டளை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறிவிடுவார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த் படத்தில் புரபொசர் கிருஷ்ணன் என்ற கேரக்டராகவே அவர் மாறியிருப்பார். கண்டிப்பான அதே நேரத்தில் அன்பான புரபொசர் கேரக்டரில் நடித்த அவர், காதல் அவரது கொள்கையை திசை திருப்பிய கதைதான் ‘ஆண்டவன் கட்டளை
எம்ஜிஆர் - ஆனந்தஜோதி: மக்கள் திலகம் எம்ஜிஆர், பள்ளி பிடி மாஸ்டராக இந்த படத்தில் நடித்திருப்பார். ஒரு கொலை வழக்கில் சிக்கியதால் அவரது வாழ்க்கையில் ஏற்படும் திருப்பம் தான் இந்த படத்தின் கதை. இதில் எம்ஜிஆரின் மாணவராக குழந்தை நட்சத்திரமாக கமல்ஹாசன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
ரஜினிகாந்த்- தர்மத்தின் தலைவன்: ரஜினிகாந்த் இந்த படத்தில் நடித்த இரண்டு கேரக்டர்களில் ஒன்று புரபொசர் கேரக்டர். அன்பின் அடையாளமாக அதே நேரத்தில் ஞாபகமறதியுள்ள ஒரு நகைச்சுவையான கேரக்டரில் ரஜினி இந்த படத்தில் நடித்திருப்பார். மேலும் ரஜினிகாந்த், ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திலும் புரபொசராக நடித்திருப்பார்
கமல்ஹாசன் - நம்மவர்: ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த படத்தில் கமல் கேரக்டர் அமைந்திருக்கும். இந்த படத்தில் அவர் கூறிய கல்வி குறித்த பல புரட்சி கருத்துக்கள் இப்போதும் பொருத்தமாக இருப்பது பெரும் ஆச்சர்யம்
கே.பாக்யராஜ் - முந்தானை முடிச்சு: பாக்யராஜின் வழக்கமான கலகலப்புடன் கூடிய வாத்தியார் கேரக்டர். இதே படத்தில் நடிகை தீபாவும் ஒரு கவர்ச்சி டீச்சராக வலம் வருவார். மேலும் கே.பாக்யராஜ், ‘சுந்தரகாண்டம்’ என்ற படத்திலும் ஆசிரியர் கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
விஜயகாந்த் - ரமணா: ஒரு ஆசிரியர் என்பவர் கல்வி கற்று தருபவர் மட்டுமல்ல, சமூகத்தில் இருக்கும் களைகளையும் பிடுங்க கற்றுக்கொடுப்பவர் என்பது விஜயகாந்தின் இந்த ரமணா கேரக்டர் நமக்கு உணர்த்தும். மிகச்சிறப்பான புரபொசர் கேரக்டர்களில் ஒன்று.
ரேகா -கடலோர கவிதைகள்: பாரதிராஜாவின் இந்த படத்தில் அறிமுகமான ரேகா, முதல் படத்திலேயே தனது நடிப்பு முத்திரையை பதித்து தமிழ் சினிமாவின் பிரபல நடிகையானார். ரேகாவின் டீச்சர் கேரக்டர் இன்றும் பலரது மனதில் பதிந்திருக்கும்
நயன்தாரா - ஏகன்: நயன்தாரா இந்த படத்தில் கெமிஸ்ட்ரி புரபொசர் என்பதும், தல அஜித் அவரிடம் படிக்கும் மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடன இயக்குனர் ராஜூ சுந்தரம் இந்த படத்தை இயக்கியிருந்தார். மேலும் நயன்தாரா, பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்திலும் டீச்சராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிகா - ராட்சசி: கண்டிப்பான டீச்சர் கேரக்டரை கண்முன் நிறுத்தும் கேரக்டர் ஜோதிகாவுக்கு. ஒரு கிராமத்து பள்ளிக்கூடத்தை ஒரு தலைமை ஆசிரியர் நினைத்தால் எப்படி மாற்றலாம் என்பதற்கு உதாரணம் ஜோதிகாவின் கேரக்டரும் இந்த திரைப்படமும்
சினேகா - பள்ளிக்கூடம்: மிகவும் உணர்ச்சிகரமான ஆசிரியை கேரக்டரில் இந்த படத்தில் சினேகா நடித்திருப்பார். இவர் ஏற்கனவே ‘ஹரிதாஸ்’ படத்திலும் இதேபோல் டீச்சர் கேரக்டரில் நடித்திருந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் தளபதி விஜய் புரபொசர் கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மேற்கண்ட நட்சத்திரங்கள் மட்டுமின்றி சமுத்திரக்கனி, விமல், சுகன்யா, உள்பட தமிழ் திரையுலகில் ஆசிரியர் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarush Jayaraj
Contact at support@indiaglitz.com
Comments