விடியலுக்கு வித்திட்ட ஜாம்பவான்களுக்கு… சிறப்பு தினம் இன்று!!!

  • IndiaGlitz, [Saturday,September 05 2020]


ஒருநாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் இருக்கிறது எனப் பொதுவாகச் சொல்லப்படுவது உண்டு. அத்தகைய இளைஞர்களை ஆக்கச் சக்தியாக உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் ஆசிரியர்கள்தான். களி மண்ணைக்கூட உருவப் பொம்மையாக மாற்றுவதற்கு ஒரு சிறந்த கலைஞன் தேவைப்படுகிறான். அதைப்போல இளைஞர் சமுதாயத்தை வல்லமைக் கொண்டவர்களாக மாற்றுவதற்கு இந்த ஆசிரியர்கள் மட்டுமே உறுதுணையாக இருக்கின்றனர். அத்தகைய ஆசிரியப் பெருமக்களை இந்தியாவில் 1962 முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி சிறப்பித்து வருகிறோம்.  

இதேபோல உலக நாடுகள் அனைத்திலும் வெவ்வேறு தினங்களில் ஆசிரியப் பெருமக்களை சிறப்பிக்கின்றனர். நம்முடைய இந்தியாவில் செப்டம்பர் 5 ஆம் தேதியை தேர்ந்தெடுத்ததற்கு இன்னொரு முக்கியக் காரணமும் இருக்கிறது. சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் இரண்டாம் குடியரசுத் தலைவராகப் பணியாற்றியவரும் சிறந்த தத்துவஞானியுமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் செப்டம்பர் 5. பாரதரத்னா விருது விருதுபெற்ற இவருடைய பெயர் 27 முறை நோபல் பரிசுக்காகவும் 16 முறை இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்காகவும் 11 முறை அமைதிக்கான நோபல் பரிசுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 20 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் சிறந்த தத்துவஞானி, சிறந்த கல்வியாளர் என்ற பெருமைக்கும் உரியவர். 1888 இல் பிறந்த இவருக்கு 1954 இல் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. கல்வியறிவில் ஒப்பில்லா ஆசானாக விளங்கிய இவர் பிறந்தது ஆந்திர மாநிலத்தில். ஆனால் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில்தான் தன்னுடைய முதுகலை தத்துவவியல் படிப்பை முடித்து இருக்கிறார்.

மைசூர் பல்கலைக் கழகம், கொல்கத்தா பல்கலைக் கழகம் உட்பட பல்வேறு கல்லூரிகளில் தன்னுடைய ஆசிரியப் பணியைத் தொடந்திருக்கிறார். பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகம், ஆந்திரப் பிரதேச பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தராகவும் பணியாற்றி இருக்கிறார். அதைவிட சென்னை மாநிலக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிய பேற்றையும் நாம் பெற்றிருக்கிறோம். இந்தியத் தத்துவத்தின் பெருமையையும் செழுமையையும் தன்னுடைய எழுத்துக்களால் பதிவுசெய்து அழியாத வரலாற்று ஆதாரத்துக்கு  வித்திட்டவர். இத்தகைய பெருமை வாய்ந்த கல்வியாளர் பிறந்த தினத்தில் நம்முடைய ஆசிரியர் பெருமக்களுக்கு நாம் சிறப்பு செய்கிறோம். அடுத்த தலைமுறை மாணாக்கரையும் இளைஞர் சமுதாயத்தையும் தம்முடைய ஆற்றலால் வளர்த்துவிடும் ஆசிரியப் பெருமக்களுக்கு இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்…

More News

தனுஷ்-வெற்றிமாறன் மீண்டும் இணைவதை உறுதி செய்த பிரபல தயாரிப்பாளர்!

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் கடந்த 13 ஆண்டுகளில் 5 படங்கள் மட்டுமே இயக்கி உள்ளார் என்பதும் அந்த ஐந்து படங்களில் பொல்லாதவன், ஆடுகளம், வடசன்னை மற்றும் அசுரன் ஆகிய நான்கு திரைப்படங்களில்

தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே! அரசியல் போஸ்டர் அதிரடியில் இறங்கிய சூர்யா ரசிகர்கள்!

கடந்த பல ஆண்டுகளாகவே அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களிலும் போஸ்டரிலும் மோதிக்கொள்வது தெரிந்ததே

தமிழகப் பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பிரதமர் மோடி எழுப்பிய முக்கிய கேள்வி?

தமிழகத்தைச் சார்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரிடம் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் ஒரு முக்கியக் கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

மாதிரி சவப்பெட்டியில் அடைத்து தண்டனை… இத்தனை கொடூரம் எதற்கு தெரியுமா?

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து தப்பிக்க முகக்கவசம், தனிநபர் இடைவெளி போன்றவை மட்டுமே இதுவரை தீர்வாகக் கருதப்பட்டு வருகிறது.

பப்ஜி கேமுக்கு பதில் புதிய கேம்: தொடங்குகிறார் 'ரஜினி-ஷங்கர்' பட நடிகர்!

இந்திய சீன ராணுவ வீரர்கள் இடையே கடந்த ஜூன் மாதம் லடாக் பகுதியில் நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பது தெரிந்ததே.