வகுப்பறையில் ஆசிரியையை அடித்து நொறுக்கிய மாணவர்கள்; அதிர்ச்சி வீடியோ
- IndiaGlitz, [Thursday,November 14 2019]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பெண் ஆசிரியை ஒருவரை சூழ்ந்த பள்ளி மாணவர்கள் அவரை நாற்காலிகள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ரேபேலி என்ற இடத்தில் செயல்பட்டு வரும் காந்தி நிகேதன் என்ற பள்ளியில் மம்தாதுபே என்பவர் குழந்தைகள் நல அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது ஆசிரியையின் கைப்பையை ஒரு மாணவன் தூக்கி எறிந்தார். இதற்கு அந்த ஆசிரியை கண்டனம் தெரிவித்த வாரு கைப்பையை எடுத்த போது அனைத்து மாணவர்களும் ஆசிரியையை சூழ்ந்து விட்டனர்
இந்த நிலையில் திடீரென ஒரு மாணவன் அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலியை தூக்கி ஆசிரியையை சரமாரியாக தாக்கும் சம்பவம் அந்த வகுப்பில் உள்ள சிசிடிவி கேமிரா மூலம் தெரிய வந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த சம்பவம் குறித்து கல்வி நிறுவனத்தின் மேலாளர் விசாரணை செய்தபோது ஆசிரியை தங்களை ஆதரவற்றோர் என திட்டியதால் தாக்கியதாக மாணவர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆசிரியை தன்னை அந்த பள்ளியின் நிர்வாகி தான் மாணவர்களை தூண்டிவிட்டு தாக்கல் செய்ததாகவும், ஏற்கனவே தான் பணிநீக்கம் செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தின் மூலம் மீண்டும் பணியில் சேர்ந்ததால் தன் மீதுள்ள முன்விரோதம் காரணமாக மாணவர்களை அவர் தூண்டிவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருவதாக பள்ளி நிர்வாகம் மேலாளர் தெரிவித்துள்ளார்
#WATCH A child welfare official, Mamata Dubey, was thrashed by students at Gandhi Sewa Niketan in Raebareli, yesterday. pic.twitter.com/ZCBGJeZ8Z3
— ANI UP (@ANINewsUP) November 12, 2019