நீட் தேர்வில் சாதனை: சத்தியத்தை நிறைவேற்றிய சபரிமாலா
- IndiaGlitz, [Monday,October 19 2020]
நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை என்ற மன உளைச்சலில் அரியலூர் அனிதா கடந்த 2017ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அனிதாவின் தற்கொலையால் அதிர்ச்சி அடைந்த சபரிமாலா என்ற அரசு பள்ளி ஆசிரியை அரசுப் பள்ளி மாணவர்களை நீட் தேர்வில் வெற்றி பெறச் செய்வேன் என்ற சவால் விடுத்து அரசுப் பள்ளி ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தார்.
அதன் பின்னர் அவர் கடந்த ஆண்டு ஆடு மேய்க்கும் நபர் ஒருவரின் மகனான ஜீவித்குமாரை தான் நீட் தேர்வுக்காக படிக்க வைப்பதாக முடிவு செய்து அவரை நீட் தேர்வில் வெற்றி பெற வைப்பேன் என்று சவால் செய்தார்.
ஜீவித்குமாரும் தனக்கு வழிகாட்டுதலுக்கு ஆள் இருந்தால் கண்டிப்பாக நீட் தேர்வில் 650 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பேன் என்று கூறினார். இந்த நிலையில் ஒரு ஆண்டு கோச்சிங் சென்டரில் ஜீவித்குமாரை படிக்க வைத்த சபரிமாலாவின் உதவியால் இன்று அகில இந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று 664 மதிப்பெண்களை ஜீவித்குமார் நீட் தேர்வில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் அரசு பள்ளி மாணவர்களையும் நீட் தேர்வில் வெற்றிபெற செய்வேன் என சத்தியம் செய்து சவால் விட்ட சபரிமாலாவின் எண்ணம் தற்போது நிறைவேறியுள்ளது. இதனை அடுத்து மாணவர் ஜீவித்குமாருக்கும், அவரது சாதனைக்கு உதவிய சபரிமாலாவுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.