ஜனாதிபதி பெயர்கூட தெரியாத ஆசிரியர் தேர்வில் முதலிடம் பிடித்தவர்: அதிர்ச்சித் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆசிரியர் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த ஒருவருக்கு ஜனாதிபதி பெயர் கூட தெரியவில்லை என்ற தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே அனைத்து தேர்வுகளிலும் மோசடி நடந்து வருவது தேர்வாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் 69 ஆசிரியர் பணிக்கான தேர்வு ஒன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது. இந்த தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றதாக பொதுநல வழக்கு ஒன்று அலகாபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘ஆசிரியர் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகப்பட்ட 10 பேர்களை பிடித்து விசாரணை செய்து வந்தோம். அவர்களில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த தர்மேந்திர படேல் என்பவரை விசாரித்த போது, அவருக்கு இந்தியாவின் ஜனாதிபதி யார் என்று கூட தெரியாத நிலை கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம் என்று கூறியுள்ளார்.
இந்திய ஜனாதிபதி யார் என்பதை 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கூட தெரியும் என்ற நிலையில் இதை கூட தெரியாத ஒருவர் ஆசிரியர் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் போன்றவர்களிடம் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆகும் என்று நினைத்தால் அச்சமாக இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout