ஜனாதிபதி பெயர்கூட தெரியாத ஆசிரியர் தேர்வில் முதலிடம் பிடித்தவர்: அதிர்ச்சித் தகவல் 

  • IndiaGlitz, [Thursday,June 11 2020]

ஆசிரியர் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த ஒருவருக்கு ஜனாதிபதி பெயர் கூட தெரியவில்லை என்ற தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே அனைத்து தேர்வுகளிலும் மோசடி நடந்து வருவது தேர்வாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் 69 ஆசிரியர் பணிக்கான தேர்வு ஒன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது. இந்த தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றதாக பொதுநல வழக்கு ஒன்று அலகாபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘ஆசிரியர் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகப்பட்ட 10 பேர்களை பிடித்து விசாரணை செய்து வந்தோம். அவர்களில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த தர்மேந்திர படேல் என்பவரை விசாரித்த போது, அவருக்கு இந்தியாவின் ஜனாதிபதி யார் என்று கூட தெரியாத நிலை கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம் என்று கூறியுள்ளார்.

இந்திய ஜனாதிபதி யார் என்பதை 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கூட தெரியும் என்ற நிலையில் இதை கூட தெரியாத ஒருவர் ஆசிரியர் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் போன்றவர்களிடம் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆகும் என்று நினைத்தால் அச்சமாக இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

ரூ.350 கோடி பட்ஜெட்டில் படமெடுத்த இயக்குனருக்கு நிச்சயதார்த்தம்

ரூபாய் 100 கோடி பட்ஜெட்டுக்கு மேல் படம் எடுக்கும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் அரிதாகவே இருந்து வருகின்றனர். அந்த வகையில் 'பாகுபலி' புகழ் பிரபாஸ் நடிப்பில் 'சாஹோ' என்ற திரைப்படம்

மருத்துவமனைகள் மூலம் கொரோனா பரவுமா??? பீதியைக் கிளப்பும் புதுத் தகவல்!!!

கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் அன்றாட இயல்பு வாழ்க்கையையே பாதித்து இருக்கிறது. இந்நிலையில் ஒரு மனிதனின் கடைசி நம்பிக்கையாக இருப்பது மருத்துவ மனைகள்தான்

பெண்கள், தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்த கமல்ஹாசன்!

உலக நாயகன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் இந்த கொரோனா நேரத்தில் பல்வேறு ஆக்கபூர்வமான செயல்களை செய்துவருகிறார்.

கணவருக்கு முடிவெட்டி விட்ட பிரபல நடிகை: வைரலாகும் புகைப்படம்

கொரோனா வைரஸ் பரபரப்பு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் உலகில் உள்ள அனைவருக்குமே இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

“சாத்தானின் வேலையை தோற்கடித்து விட்டோம்” - தான்சானிய அதிபரின் மகிழ்ச்சி செய்தி!!!

கொரோனா அரக்கன் உலகம் முழுவதும் கொடூரமான தாக்குதலை ஏற்படுத்தி வரும் வேளையில் சில நாடுகளில் மட்டும் கொரோனா கட்டுக்குள் வந்து இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது