கிஷோர் கே ஸ்வாமியை அடுத்து மேலும் ஒருவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

  • IndiaGlitz, [Friday,June 25 2021]

அரசியல் தலைவர்களை சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சனம் செய்ததாக அரசியல் விமர்சகர் கிஷோர் கே ஸ்வாமி கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல்துறை ஆணையர் இன்று உத்தரவிட்டார் என்ற செய்தியை சற்று முன் பார்த்தோம். இந்த நிலையில் கிஷோர் கே ஸ்வாமியை அடுத்து மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

சென்னை கேகே நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் என்பவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ராஜகோபாலன் மீது மாணவிகள் பலர் தொடர்ச்சியாக பாலியல் புகார்களை தெரிவித்து வரும் நிலையில் சற்று முன்னர் சென்னை காவல்துறை ஆணையர், ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதனால் இன்று ஒரே நாளில் இரண்டு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

குண்டர் சட்டம் பாய்ந்தால் ஒரு வருடத்திற்கு ஜாமீன் கிடைக்காது என்பதால் ஆசிரியர் ராஜகோபாலன் இன்னும் ஒரு வருஷம் சிறையில் இருந்து தீர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு பேர் மீது குண்டர் சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

நியூசிலாந்தை கவிழ்க்க திட்டம் போடும் பிசிசிஐ… ரசிகர்களை குஷிப்படுத்தும் தகவல்!

சவுதாம்ப்டனில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான உலகக் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி  வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்றது.

தூக்கத்தில் உங்களை அமுக்கும் பேய் எது தெரியுமா? அறிவியல் விளக்கம்!

நான் தூங்கிக்கொண்டு இருந்தபோது யாரோ என்னை பிடித்து அழுத்தினார்கள், என்னால் மூச்சு கூட விடமுடியவில்லை.

திருமணத்திற்கு முன்பு துணையின் Blood Groupஐ கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்…. ஏன்?

திருமணத்திற்காக நாம் ஜாதகத்தை மட்டும் பார்க்கிறோம். ஆனால் திருமணத்திற்கு முன்பு உங்கள் துணையின் ரத்த வகையை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்

"அணில் பாலாஜி" என்று கிண்டலடித்து பதிவிட்ட 80'ஸ் நடிகை....! இருந்தாலும் இவங்களுக்கு தைரியம் தான்ப்பா....!

தமிழக அமைச்சரை "அணில் பாலாஜி" என்று கலாய்த்து, நடிகை கஸ்தூரி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு டெல்டா பிளஸ்: அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் கொரோனா வைரஸை விட அபாயகரமான டெல்டா பிளஸ் என்ற உருமாறிய புதியவகை வைரஸ் இந்தியாவில் பரவி வருவதாக