இளம் பெண்ணுக்கு திடீர் பிரசவவலி- உடற்கல்வி ஆசிரியர் செய்த துணிச்சலான காரியம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பெங்களூரில் உள்ள பூங்கா ஒன்றிற்கு ஒரு பழங்குடியினப் பெண் நிறைமாதக் கர்ப்பதோடு தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வந்து இருக்கிறார். இந்நிலையில் அப்பெண்ணிற்கு திடீரென கடுமையான பிரசவவலி ஏற்பட்டு இருக்கிறது. இதைப் பார்த்த பலரும் ஆம்புலன்ஸ் வரவழைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் அந்தப் பூங்காவில் இருந்த ஒருவர் கூட பெண்ணாக இல்லாத காரணத்தால் அந்த இளம்பெண் கத்தி கதறி இருக்கிறார்.
இந்தக் காட்சிகளை அவ்வழியாகச் சென்ற உடற்கல்வி ஆசிரியரான ஷோபா பிரகாஷ் பார்த்து இருக்கிறார். இதனால் ஷோபா அந்தப் பெண்ணிடம் சென்று ஆறுதலாகப் பேசி இருக்கிறார். இதற்கிடையில் அங்கு இருந்த இளைஞர் ஒருவர் தனக்கு தெரிந்த மருத்துவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த மருத்துவர் பெண்கள் யாராவது அருகில் இருக்கிறார்களா? எனக் கேட்க, இளைஞர் இந்த உடற்கல்வி ஆசிரியரிடம் செல்போனை கொடுத்து இருக்கிறார்.
இதையடுத்து அந்த மருத்துவர் செல்போன் மூலம் கொடுத்த அறிவுரையை வைத்து உடற்கல்வி ஆசிரியர் ஷோபா மிக துணிச்சலாக அந்த இளம்பெண்ணுக்கு பிரசவம் பார்த்து உள்ளார். இந்த பிரசவத்தில் தாயிடம் இருந்து குழந்தையை மிக துணிச்சலாக பிரித்தும் எடுத்து இருக்கிறார். பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மிக துணிச்சலாகச் செயல்பட்டு பிரசவம் பார்த்த உடற்கல்வி ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments