சிக்னல் கிடைக்காததால் மரத்தில் ஏறி ஆன்லைனில் பாடம் நடத்திய ஆசிரியர்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் கோடிக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல், பாடம் படிக்க முடியாமல் சிக்கலில் உள்ளனர். இந்த நிலையில் பல கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மேற்குவங்கத்தை சேர்ந்த சுப்ராட்டா என்ற ஆசிரியர் கடந்த சில நாட்களாக தனது மொபைல் போன் மூலம் வீடியோ கான்ப்ரன்ஸில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்தார். இந்நிலையில் திடீரென அவரது வீட்டில் இண்டர்நெட் சிக்னல் கிடைக்காததால் அவரால் பாடம் நடத்த முடியவில்லை. வீட்டின் ஒவ்வொரு பகுதியாக சென்று சிக்னல் கிடைக்க அவர் முயற்சி செய்தார். ஆனால் அவரது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அதிரடி முடிவெடுத்த ஆசிரியர் அருகில் இருந்த மரம் ஒன்றில் ஏறி சிக்னல் கிடைக்கின்றதா? என்று பார்த்தபோது சிக்னல் கிடைத்தது. உடனே மரத்தில் உட்கார்வதற்காக இடம் தயார் செய்து காலை முதல் மாலை வரை அதாவது காலை 9.30 முதல் மாலை 6 மணி வரை மரத்தில் உட்கார்ந்தே பாடம் நடத்தியதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களுடன் கூடிய செய்தி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

புகைப்பிடிப்பவர்கள் ஏன் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் தெரியுமா???

WHO வின் கருத்துப்படி, உலகம் முழுவதும் ஏற்படும் அதிக மரணத்திற்கு புகைப்பழக்கமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

காசநோய் தடுப்பூசி (பி.சி.ஜி) கொரோனாவில் இருந்து காப்பாற்றுமா???

பொது ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவதற்காக போடப்படும் காசநோய் தடுப்பூசி பயன்பாடு, அதிகம் உள்ள நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கிறது என ஒரு ஆய்வு வெளியாகி இருக்கிறது.

இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு கேட்காமலே உதவி செய்த ரஜினிகாந்த்

கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திரையுலகை சேர்ந்த பல தொழிலாளிகள், நலிந்த நடிகர்கள் உள்பட பலர் கஷ்டத்தில் இருக்கும் நிலையில் பெரிய நடிகர் நடிகைகள்

குழந்தைக்கு 'லாக்டவுன்' என பெயர் வைத்த பெற்றோர்கள்: குவியும் வாழ்த்துக்கள்

இந்தியாவில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் 'லாக்டவுன்' பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 13ம் தேதி திரிபுரா மாநிலத்தில் சஞ்சய் மற்றும் மஞ்சு என்ற தம்பதிக்கு குழந்தை ஒன்று பிறந்தது.

சாப்பாட்டை எல்லாம் வீடியோவா போடணுமா? குஷ்பு ஆதங்கம்

ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பல நடிகர் நடிகைகள் தினந்தோறும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்