கமல்ஹாசனை சந்திக்க மறுத்த பகவான் ஆசிரியர்

  • IndiaGlitz, [Friday,July 20 2018]

சமீபத்தில் திருவள்ளூரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த பகவான் என்ற ஆசிரியருக்கு இடமாற்ற உத்தரவு வந்தபோது அந்த பள்ளியில் படித்த மாணவ, மாணவர்களின் உணர்ச்சிமிக்க வேண்டுகோள் காரணமாக அவருடைய இடமாறுதல் ரத்து செய்யப்பட்டது. பகவான் ஆசிரியர் அந்த பள்ளியை விட்டு போகக்கூடாது என்று மாணவ, மாணவியர் உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுத கண்ணீர் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பகவான் ஆசிரியருக்கு ஏற்கனவே தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க விரும்பி ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்திற்கு அழைப்பு விடுத்தார். செய்தியாளர்கள் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் திடீரென இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக கமல்ஹாசன் தரப்பில் இருந்து கூறப்பட்டது.

இதுகுறித்து விசாரித்தபோது கமல்ஹாசனின் அழைப்பை பகவான் ஆசிரியர் ஏற்று கொள்ளவில்லை என தெரியவந்தது. இதுகுறித்து பகவான் ஆசிரியர் கூறியபோது கமலஹாசன் என்னை கவுரப்படுத்த விரும்புவதாகவும் அதற்காக நான் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வரவேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் என்னிடம் கூறினார். ஆனால் கமல்ஹாசனின் அழைப்புக்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன். நான் ஒரு அரசு பணி ஊழியர். கமலஹாசன் ஒரு அரசியல் கட்சியின் தலைவர். ஒரு அரசியல் கட்சி தலைவரை அரசு ஊழியரான நான் சந்தித்தால் சரியாக இருக்காது என்பதால் அந்த அவருடைய அழைப்பை ஏற்கவில்லை என்று கூறியுள்ளார். இவர் மீது ஏன் மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளியில் இருந்து செல்ல அனுமதிக்கவில்லை என்பது இப்போது புரிகிறது.

More News

தமிழக மாணவர்களின் கருணை மதிப்பெண்களுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் மொழிபெயர்ப்பு குளறுபடிகள் இருந்ததால் தமிழில் நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும்

'சூர்யா 37' படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகர்

சூர்யா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் 'சூர்யா 37' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் தொடங்கி முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தது.

நான் என்ன இளிச்சவாயனா? ரம்யாவை வறுத்தெடுக்கும் சினேகன்

பிக்பாஸ் வீட்டின் ஒருசில மணி நேர விருந்தாளியாக சமீபத்தில் சென்று வந்தவர் சினேகன். கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் வரை தாக்குப்பிடித்து இருந்தவர்

அட்வைஸ் பண்ண தகுதி வேண்டாமா? மகத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் தொடங்கி 32 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் ஒருவர் கூட பார்வையாளர்களின் நன்மதிப்பை பெறவில்லை.

விஜய்சேதுபதி, த்ரிஷாவின் போட்டியை தவிர்த்த ஆர்யா

கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம் மற்றும் சிவாவின் 'தமிழ்ப்படம் 2' ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வரும் நிலையில் இன்று 'போத' என்ற தமிழ்ப்படம் மட்டுமே ரிலீஸ் ஆகவுள்ளது.