தலைத் துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட ஆசிரியர்… உலகம் முழுவதும் விஷ்வரூபம் எடுக்கும் சர்ச்சை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரான்ஸ் நாட்டில் தலைநகரான பாரீஸின் புறநகர் பகுதியில் நேற்று மாலை ஒரு ஆசிரியர் தலைத் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இச்சம்பவம் அந்நாட்டில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் பள்ளியின் அருகிலேயே நடந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தக் கொலையை 18 வயதே ஆன ஒரு இளைஞன் நடத்தி இருக்கிறான் என்பதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கொலை செய்யப்பட்ட ஆசிரியர் வரலாற்று பாடத்தை மாணவர்களுக்கு எடுக்கும்போது வகுப்பில் நபிகள் நாயகத்தின் கேலி சித்திரத்தை காட்டியிருக்கிறார். இதனால் கோபம் அடைந்த ஒரு இளைஞன் ஆசிரியர் வெளியே வந்தவுடன் அவரை தலையைத் துண்டித்து வெறிச்செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து அந்த இளைஞனை பிடிப்பதற்காக போலீசார் முயன்றபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழந்து விட்டதாகவும் தகவல் கூறப்படுகிறது.
கடந்த 2015 இல் இஸ்லாம் மதத்தின் புனிதத் தலைவராகக் கருதப்படும் நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரம் சார்லி ஹெப்டோ எனும் ஒரு பத்திரிக்கையில் வெளியானது. இதையடுத்து அந்த பத்திரிக்கைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு அந்நிறுவன ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். மேலும் அந்தப் பத்திரிக்கை நிரந்தரமாக தடை செய்யப்பட்டது.
உலகம் முழுவதும் இது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரம் வெளியிடப்பட்டதைக் குறித்து இஸ்லாமிய அமைப்புகள் தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டே இருந்தன. அந்த வகையில் தற்போது இரண்டாவது தாக்குதல் தொடுக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் ஒரு வரலாற்று ஆசிரியர் பள்ளிக்கு எதிராகவே தலைத் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இச்சம்பவத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது என அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout