தமிழில் டைட்டில் வைக்கும் படங்களுக்கு மீண்டும் வரிவிலக்கா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக முதல்வராக கருணாநிதி அவர்கள் இருந்த போது தமிழில் டைட்டில் வைக்கும் திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்கும் உத்தரவை பிறப்பித்தார். அதனை அடுத்து பல திரைப்படங்கள் வரிவிலக்கு பெறுவதற்காக தமிழில் தான் டைட்டில் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதிமுக ஆட்சியில் படிப்படியாக இந்த திட்டம் நடைமுறைக்கு வராததால் தற்போது மீண்டும் ஆங்கிலம் கலந்த டைட்டில் பல திரைப்படங்களுக்கு வைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மீண்டும் திமுக ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழில் டைட்டில் வைத்தால் வரிவிலக்கு வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையில் ’தமிழில் பெயர் வைக்கும் தமிழ் திரைப்படங்களுக்கு மீண்டும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டு உள்ளது. இதனை தமிழக முதல்வர் அவர்கள் பரிசீலித்து இது குறித்த உத்தரவை பிறப்பிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும் என்றும், நடிகர் சங்க பிரச்னைகள் தீர்ந்தவுடன் நடிகர்கள் சம்பளம் குறைப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments