பள்ளி பாடப் புத்தகங்களுக்கும் வரி விதிப்பா??? வைரல் தகவலுக்கு மத்திய அரசு விளக்கம்!!!
- IndiaGlitz, [Friday,September 25 2020]
பள்ளிப் பாடப் புத்தகங்களுக்கும் மத்திய அரசு புதிய வரி விதிப்பைக் கொண்டு வரப்போவதாகச் ஒரு அறிக்கை கடந்த தினங்களாக சமூக வலைத்தளங்களில் கடும் வைரலை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து இத்தகவலுக்கான விளக்கத்தை மத்திய அரசு தற்போது வெளியிட்டு இருக்கிறது.
PIB Fact Check எனும் டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்த மத்திய அரசு, பள்ளி பாடப் புத்தகங்களுக்கு மத்திய அரசு வரி விதித்துள்ளதாக சமூக ஊடகங்களில் கூறப்படுகிறது. இந்தக் கூற்று போலியானது. பள்ளி பாடப் புத்தகங்களுக்கு வரி இல்லை” எனப் பதிவிடப்பட்டு உள்ளது. இந்த டிவிட்டர் கணக்கானது மத்திய அரசின் கொள்கை மற்றும் திட்டங்களைக் குறித்து தவறான தகவல்கள் வெளியாகும்போது விளக்கம் அளிப்பதற்கு என்றே உருவாக்கப் பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கொரோனா தாக்கத்தால் பள்ளி கட்டணத்தொகை செலுத்த முடியாமல் தவித்து வரும் குழந்தைகளுக்கு உதவும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு ரூ.11 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது. இந்தத் தகவலையும் PIB Fact Check எனும் டிவிட்டர் கணக்கு இது உறுதிப்படுத்தப் படாதது என்றும் போலியானது என்றும் தெளிவுப் படுத்தி இருந்தது.
இந்நிலையில் பள்ளிப்பாடப் புத்தகங்களுக்கு புதிய வரி விதிக்கப்பட போவதாக வலம் வந்த தகவலையும் மத்திய அரசு நிராகரித்து இருக்கிறது. மேலும் இதுபோன்ற போலியான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
दावा: सोशल मीडिया पर यह दावा किया जा रहा कि केंद्र सरकार ने स्कूली किताबों पर टैक्स लगा दिया है। #PIBFactCheck: यह दावा फर्जी है। स्कूली टेक्स्ट बुक्स पर कोई टैक्स नहीं है। pic.twitter.com/OsvfgYMOgC
— PIB Fact Check (@PIBFactCheck) September 24, 2020