அந்த இடத்தில் டேட்டூவா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா!

  • IndiaGlitz, [Friday,October 01 2021]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் பாடகியாகவும் வலம்வருபவர் ஆண்ட்ரியா. “தரமணி“, “ஆயிரத்தில் ஒருவன்“, “விஸ்வரூபம்“, “வடசென்னை“ எனப் பல வெற்றிப்படங்களில் இவருடைய நடிப்பு அபாரமாக பேசப்பட்டது. இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் படு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் சுற்றுலா சென்றிருந்தார். அதைத் தொடர்ந்து பல கிளாமர் புகைப்படங்களை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடிவயிற்றில் புது டேட்டூ போட்டிருக்கும் புகைப்படம் ஒன்றை தற்போது நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அந்த இடத்தில் டேட்டூவா? என ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இன்னும் சில ரசிகர்கள் ஒருபடி மேலேபோய் “அந்த டேட்டூ போட்டவன் மச்சக்காரன்டா?“ என்பது போன்ற கமெண்டுகளையும் பதிவிட்டு உள்ளனர்.

நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள “அரண்மனை 3“ திரைப்படம் வரும் ஆயதப்பூஜைக்கு ரிலீசாக உள்ளது. அதேபோல “பிசாசு2” திரைப்படமும் விரைவில் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதைத்தவிர இயக்குநர் தில் சத்யா என்பவர் இயக்கத்தில் “மாளிகை“ எனும் புது திரைப்படத்திலும் நடிகை ஆண்ட்ரியா நடிக்க இருக்கிறார். மேலும் நடிகர் சிபி சத்யராஜுடன் இணைந்து “வட்டம்“ எனும் திரைப்படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.