பிட்சில் விவசாயம் பண்றீங்களா? அகமதாபாத் மைதானத்தை கேலி செய்யும் முன்னாள் வீரர்!
- IndiaGlitz, [Monday,March 01 2021] Sports News
இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் அகமதாபாத் மோதேரா மைதானம் தற்போது கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது. நடந்து முடிந்த 3 ஆவது டெஸ்ட் போட்டியில் வெறும் 842 பந்துகள் மட்டுமே வீசப்பட்டது. மேலும் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒன்றரை நாளில் நடைபெற்று முடிந்த ஒரே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியும் இதுதான். இந்தப் போட்டியில் அக்சர் படேல், அஸ்வின் என இருவர் மட்டுமே பெரிதாகப் பேசப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இதென்ன டெஸ்ட் மேட்சா இல்லை கிளப் மேட்சா என இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் 3 ஆவது டெஸ்ட் மேட்சை போலவே 4 ஆவது போட்டியிலும் விக்கெட்டுகள் சரிந்தால் இந்தியாவின் புள்ளிகளை ஐசிசி குறைக்க வேண்டும் எனவும் காட்டத்துடன் கருத்து வெளியிட்ட உள்ளார்.
அதேபோல அகமதாபாத் மைதானத்தை கேலி செய்யும் விதமாக ஜிம்பாப்வே முன்னாள் விக்கெட் கீப்பர் கேப்டன் ததேந்தா தைபு தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அதில் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இருவரும் கிரிக்கெட் பிட்சில் அமர்ந்து 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்காக பிட்சை ஆய்வு செய்து வருகின்றனர். இவர்களுக்கு பக்கத்திலேயே ஒரு டிராக்டர் உழுகிறது. இந்தப் படத்தை பதிவிட்ட தைபு அதன் கேப்ஷனாக “4 ஆவது டெஸ்ட் பிட்சை 2 கேப்டன்களும் பார்ப்பது போல் தெரிகிறது” எனப் பதிவிட்டு உள்ளார். இந்தப் பதிவு சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது.
அகமதாபாத் மைதானத்தை விவசாய நிலத்துடன் ஒப்பிட்ட தைபுவின் பதிவை அடுத்து பலரும் இந்த மைதானத்தை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இந்த வெற்றிக்கு எல்லாம் ஒரு கொண்டாட்டம் தேவையா எனவும் இந்தியக் கிரிக்கெட் அணியை குறித்தும் சிலர் கிண்டல் அடித்து வருகின்றனர். கடந்த 1935 க்கு பிறகு ஒன்றரை நாளில் முடிந்த டெஸ்ட் போட்டி இதுதான் எனவும் சில ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளனர். மேலும் பணபலம் மிக்க பிசிசிஐயின் செயலைக் குறித்து யார்தான் கேள்வி எழுப்ப முடியும் எனச் சிலர் சலிப்பு வெளிப்படுத்தவும் தொடங்கி விட்டனர்.
Looks like both Captains are interested in the 4th test pitch. ?? pic.twitter.com/qZK3Oeqtzm
— Tatenda Taibu (@taibu44) February 26, 2021