67 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டாடாவிடமே சென்ற ஏர் இந்தியா நிறுவனம்!

ஏர் இந்திய விமான நிறுவனத்தை விற்பதற்காக நடத்தப்பட்ட ஏலத்தில் டாடா நிறுவனம் அதை ஏலத்தில் எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவின் பொதுவுடைமை நிறுவனங்களுள் ஒன்றாக இருந்துவந்த ஏர் இந்திய விமான நிலையத்தை தனியாரிடம் விற்பதற்கான முயற்சியில் மத்திய அரசு கடந்த ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறது. கொரோனா காரணமாக சில மாதம் தள்ளிப்போன இந்த முயற்சி செப்டம்பர் 15 ஆம் தேதி இறுதிச்செய்யப்பட்டு தற்போது ஏலம் நடைபெற்று இருக்கிறது. இந்த ஏலத்தில் டாடா நிறுவனம் வெற்றிப்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மும்பை மற்றும் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியாவின் ஏர் இந்திய விமான நிறுவனத்தை கடந்த 1932 ஆம் ஆண்டு 146 விமானங்களுடன் ஜே.ஆர்.டி டாடா உருவாக்கினார் என்ற வரலாறு நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் இந்த தனியார் நிறுவனத்தை அரசு பின்னாட்களில் பொதுவுடைமையாக மாற்றியது.

ஆனால் பொதுவுடைமையாக பல காலம் மக்களுக்கு பலனளித்து வந்த இந்த நிறுவனத்தை தற்போது 67 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மத்தியஅரசு விற்றிருக்கிறது. அந்த நிறுவனம் மீண்டும் டாடாவின் கைகளுக்கே சென்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

More News

'மாநாடு' டிரைலர் குறித்த ஆச்சரிய தகவல் அளித்த எடிட்டர் ப்ரவீண் கே.எல்!

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள்

சூர்யாவின் 'ஜெய் பீம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூர்யா நடித்து வந்த 'ஜெய் பீம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக

அம்மாவுடன் நடிகை சுனைனா: வைரல் புகைப்படங்கள்!

பிரபல நடிகை சுனைனா தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

திரும்பி வருவோம்னு சொன்னோம் இல்ல? தல தோனியின் உற்சாகமான பேச்சு!

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டித் தொடரில் சிஎஸ்கே ப்ளே ஆப்க்கே தகுதிப்பெறாமல் பாதியில் வெளியேறியது.

லண்டனில் அறுவை சிகிச்சை… விபத்து குறித்த நடிகர் சித்தார்த் கூறிய விளக்கம்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் சித்தார்த்.